குழந்தை பேறு முதல் அஸ்வமேத யாக பலன் வரை: விரதங்களின் மகிமை!

astami viratham tamil
astami viratham tamil
Updated on

தினோரு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் தடைகள் விலகி மனவலிமை அதிகரிக்கும்.

தினோரு வாரம் முருகனை வழிபட்டு வெள்ளி அன்று விரதம் இருக்க இழந்த சொத்து பணம் பதவி கிடைக்கும்.

ன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்தால் கந்தலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

ப்பசியில் கந்தசஷ்டி விரதம் ஆறு நாள் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.

னி பிரதோஷ விரதம் இருந்தால் சிவன் கோயிலை ஐந்தாண்டு தரிசித்த பலன் கிடைக்கும்.

ருபத்தி நான்கு ஆண்டுகள் மகாசிவராத்திரி விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

மாதம் தோறும் மூன்றாம் பிறையை பார்த்தால் சந்திர தரிசனம் பார்த்தால் சிவனருள் கிடைக்கும்.

ன்பது ஆண்டு நவராத்திரி விரதம் இருந்தால் அம்பிகையின் அருளால் நினைத்தது நிறைவேறும்.

னி வளர்பிறை ஏகாதசியன்று தண்ணீர் பருகாமல் விரதம் இருப்பவர்கள் திருமாலின் திருவடியை அடைவார்கள் ஓராண்டு ஏகாதசி விரதம் இருந்த பலனைத்தரும்.

கும்பாபிஷேகத்தை தரிசித்தால் கோவிலை ஓராண்டு தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்தது. சூரிய நமஸ்காரம் செய்யலாம். சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து சூரியனுக்கு படைக்கலாம். பகலில் ஒருவேளை உணவு அருந்தலாம் இரவில் பால் பழம் சாப்பிடலாம்.

திங்கள்கிழமை விரதம் சோமவார விரதம் ஆகும். சிவபெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தில் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் தூங்கக்கூடாது. தான தர்மங்கள் செய்யவேண்டும் சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை அங்காரகனை வேண்டி விரதம் இருக்க நல்ல பலன் கிடைக்கும்.

புதன்கிழமை விரதம் புகழை கொடுக்கும் புதன் கிழமைக்குரிய தெய்வம் விஷ்ணு அன்றைய தினம் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து விரதம் இருந்தால் கல்வி ஞானம் பெருகும்.

குருபகவானுக்குரிய நாள் வியாழக்கிழமை அந்த நாளில் விரதம் இருந்தால் எல்லா காரியங்களும் கைகூடும். குரு பகவானின் தோற்றமான தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை மஞ்சள் வஸ்திரம் முல்லை புஷ்பம், வில்வம் சாற்றி வழிபட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வைகாசி விசாக விரத பலன்கள்: ஞானமும் நீண்ட ஆயுளும் தரும் ஆறுமுகனின் அற்புத வழிபாடு!
astami viratham tamil

வெள்ளிக்கிழமை விரதம் சுக்கிரனுக்கும் அம்பாளுக்கும் உரியது வெள்ளிக்கிழமை அன்று சுக்கிரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும் கடன் தொல்லைநீங்கும்.

னிக்கிழமையன்று விரதம் இருந்து வேங்கடவனை வழிபட்டால் எல்லாவித சிறப்பும் வந்தடையும்.

சிவமகா புராணத்தில் அஷ்டமி விரதம் பற்றிய செய்திகள் உள்ளது அஷ்டமி என்பது எட்டாவது திதிநாள் அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக உள்ளது. அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.

மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி சங்கராஷ்டமி

தை மாத தேய்பிறை அஷ்டமி தேவ தேவாஷ்டமி

மாசி மாத தேய்பிறை அஷ்டமி மகேஸ்வராஷ்டமி

பங்குனி மாத தேய்பிறை அஷ்டமிதிரியம்பகாஷ்டமி

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி ஸ்நாதனாஷ்டமி

வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி சதாசிவாஷ்டமி

ஆனி மாத தேய்பிறை அஷ்டமி பகவதாஷ்டமி

ஆடி மாத தேய்பிறை அஷ்டமி நீலகண்டாஷ்டமி

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி ஸ்தானுஷ்டமி

புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி ஜம்புகாஷ்டமி

ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி ஈசான சிவாஷ்டமி

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி

அஷ்டமி நாட்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதம் இருப்பதும் நல்ல பலன்களைத் தரும். அஷ்டமி விரதம் இருப்பவர்கள் அழகிய உருவத்தை பெறுவார்கள். உடல் ஊனம் இல்லாமலும் செல்வ செழிப்புடனும் இருப்பார்கள் என்றெல்லாம் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தீராத வினைகள் தீர்க்கும் காலபைரவர் அஷ்டமி விரதம்!
astami viratham tamil

டி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்துகொண்டே இருக்கும்.

வணி மாதம் வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வார்கள். அதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமண தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் செல்வங்கள் பெருகும்.

logo
Kalki Online
kalkionline.com