தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல, அது ஒரு குழுவை ஒருங்கிணைத்து, ஊக்கப்படுத்தி, சரியான திசையில் வழிநடத்திச் செல்வது. அவ்வாறு வழிநடத்துவதற்கு வெறும் நிர்வாகத் திறன்கள் மட்டும் போதாது; இரக்கமும், பச்சாதாபமும் இன்றியமையாத பண்புகளாகும். இவை ஒரு தலைவரை வெறும் நிர்வாகியாக இல்லாமல், மக்களின் மனங்களை வென்ற தலைவனாக உயர்த்துகின்றன.
சிலர் பிறக்கும்போதே இந்தப் பண்பை அதிகமாகப் பெற்றிருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே இரக்க குணமும், பிறர் மீது பரிவு காட்டும் மனப்பான்மையும் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் சிறந்த தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் திகழ முடியும்.
கடக ராசியினர்: இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுப்பவர்களாகவும், மற்றவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களைப் பாதுகாக்கும் உள்ளார்ந்த உணர்வு கொண்டவர்கள். மனித இயல்பைப் பற்றிய அவர்களின் ஆழமான புரிதல், தமது குழுவில் உள்ள அனைவரும் மதிக்கப்படுவதாகவும், புரிந்து கொள்ளப்படுவதாகவும் உணர வைக்கும் திறனை அவர்களுக்கு அளிக்கிறது. கடினமான சூழ்நிலைகளிலும் தமது குழுவினருக்காக உறுதுணையாக நிற்பார்கள்.
ரிஷப ராசியினர்: பொறுமைக்கும், நம்பகத்தன்மைக்கும் பெயர் பெயர் பெற்றவர்களான இவர்கள், எளிமையான அணுகுமுறையும், எதார்த்தமான சிந்தனையும் கொண்டவர்கள். இரக்கமும், பச்சாதாபமும் அவர்களின் உள்ளார்ந்த குணங்களாக இருக்கும். ரிஷப ராசி தலைவர்கள் தமது குழுவின் வெற்றிக்கு கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள். தமது குழு உறுப்பினர்களுக்கு ஆறுதலையும், உறுதியையும் அளிக்கும் தலைவர்களாகத் திகழ்வார்கள்.
துலாம்: இவர்கள் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை விரும்புவர்களாக இருப்பார்கள். இது அவர்களை இயல்பாகவே இரக்கமுள்ள தலைவர்களாக மாற்றுகிறது. வெவ்வேறு கருத்துக்களையும், கண்ணோட்டங்களையும் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர்கள். இதன் காரணமாக சிக்கலான பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணும் ஆற்றல் பெற்றவர்களாகவும், சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ்கிறார்கள். ஒரு தலைவராக, துலாம் ராசிக்காரர்கள் நியாயமான மற்றும் இணக்கமான பணிச்சூழலை உருவாக்க முயற்சிப்பார்கள். தமது குழுவில் உள்ள ஒவ்வொருவரின் கருத்தையும் மதிப்பார்கள்.
மீன ராசியினர்: இவர்கள் ராசிகளிலேயே மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், மற்றவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்பவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானது. மற்றவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு முன்பே, அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள். ஒரு சிறந்த தலைவராக, மீன ராசிக்காரர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையைக் கொண்டிருப்பார்கள். தமது குழுவின் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும் உண்மையான அக்கறை காட்டுவார்கள். நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவார்கள்.