
'சாண்ட்விச்' - சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த உணவு. ஆனால் ஏன் இந்தப் பெயர் வந்தது என்பது அநேக பேருக்குத் தெரியாது. எப்படிச் 'சாண்ட்விச்' பெயர் வந்தது என்பதைப் பார்ப்போமா குட்டீஸ்?
'சாண்ட்விச்' என்ற வார்த்தையின் தோற்றம் கவர்ச்சியானது. இது 18 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலப் பிரபுவான 4 வது 'ஏர்ல் ஆஃப் சாண்ட்விச்'சின் ஜான் மாண்டேகுவின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் இங்கிலாந்து மாகாணம் ஒன்றின் கவர்னர்.
மாண்டேகு ஒரு சூதாட்டக்காரர் எப்போதும் Playing cards விளையாடுவதில் அதிக நேரம் செலவிடுவது அவர் பழக்கம். கேமிங் டேபிளை விட்டு சாப்பிட கூடப் போவதில்லை.
ஆனாலும் பசிக்குமே! எனவே பட்லரை கூப்பிட்டு எளிதாகவும் அதே சமயம் சத்துள்ள காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையில் வைத்து கொண்டு வரும்படி கேட்டுக்கொண்டார. ஒரு கையால் சப்பிட்டுக் கொண்டே இன்னொரு கையினால் விளையாடினார்.
இந்த வசதியான மற்றும் புதுமையான உணவு முறை, மாண்டேகுவின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்குப் பிடித்துப் போனது. அவர்கள் அவரது நினைவாக 'சாண்ட்விச்களை' ஆர்டர் செய்யத் தொடங்கினர். அன்று முதல் இந்தப் பெயர் வழங்கப்பட்டது என்பது வரலாறு!
காலப்போக்கில், 'சாண்ட்விச்' பல்வேறு நிரப்புதல்கள், சுவையூட்டிகள் மற்றும் ரொட்டி வகைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று, 'சாண்ட்விச்' உலகளவில் ஒரு பிரியமான உணவு பொருளாகும்!
என்ன குட்டீஸ்... இனி 'சாண்ட்விச்' சாப்பிடும்போது மாண்டேகு ஞாபகம் வரும்தானே!?