வீட்டிற்கு எதிரில் இருக்கக்கூடாத விஷயங்கள்! வாஸ்து சொல்லும் ரகசியங்கள்!

Vastu tips
Vastu tips
Published on

நாம் ஒரு வீட்டை கட்டும் போதும் சரி அல்லது வாடகைக்கு எடுத்து செல்லும் போதும் சரி அந்த வீட்டின் எதிரிலே எதுப்போன்ற விஷயங்கள் இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். அதை பொருத்து நம் அதிர்ஷடமும், ஆரோக்கியமும் அமையும் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்து. இந்தப் பதிவில் இதைப் பற்றி விரிவாக காண்போம்.

நமக்கு வீடு அமைவது என்பது எந்த திசையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சில திசைகளில் வீடு அமைவதை விஷேசம், அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். கிழக்கு திசையில் தலைவாசல் இருக்கும் போது சூரிய கதிர்கள் நேரடியாக வீட்டிற்குள் வரும். இதனால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் அகலும் என்பது நம்பிக்கை. மேலும் தெய்வீக சக்தியும் நேர்மறையான ஆற்றலும் அதிகமாக இருக்கும். 

வடக்கு பார்த்து தலைவாசல் இருக்கும் வீட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்து சாஸ்திரத்தில் செல்வத்தின் அதிபதியாக மகாலக்ஷ்மியையும், குபேரரையும் சொல்வார்கள். அவர்கள் இருக்கும் திசை வடக்கு திசை என்பதால் இந்த வீட்டில் செல்வத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். 

தெற்கு திசையை பார்த்து தலைவாசல் வைத்திருந்தால் அந்த வீட்டிற்கு அவர்களுடைய முன்னோர்களின் அருளும், ஆசியும் நிறைந்திருக்கும்.

மேற்கு திசையை பார்த்து வீடு இருந்தால், சனீஸ்வர பகவானின் அருளும், ஆசியும் நிறைந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வீட்டின் அருகில் அல்லது பக்கத்தில் தப்பித்தவறிக் கூட கிணறு, பள்ளம், கழிவுநீர் தொட்டி மூடாமல் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் நோய்த்தொற்று உண்டாக்கும் கிருமிகள் அதிகமாக உண்டாகி தலைவாசல் வழியாக வீட்டிற்குள் வந்து வீட்டில் உள்ள நபர்களுக்கு நோயை உண்டாக்கும். 

வாஸ்து சாஸ்திரத்தில் தென்மேற்கு பகுதி உயரமாக இருப்பது வீட்டிற்கு செல்வத்தை கொண்டுவரும் என்று சொல்லப்படுகிறது. அதுப்போல தாழ்வாக இருந்தால் எதிர்மறையாக கருதப்படுகிறது. எனவே, வீட்டிற்கு எதிரே பள்ளம், கிணறு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

வீட்டிற்கு எதிரில் அந்த பகுதியில் இருக்கும் அனைவரும் குப்பை கொட்டும் இடமாக இருக்கக்கூடாது. இதனால் உங்கள் வீட்டிற்கு பாதிப்பு ஏற்படும். இதுபோன்ற இடங்களில் வீடு வாங்க கூடாது. உங்கள் வீட்டிற்கு எதிரில் பல்வேறு வீடுகளுக்கு மின்சாரம் தரக்கூடிய டிரான்ஸ்பார்மர் இருக்கக்கூடாது. எதற்காக  சொல்லப்படுகிறதென்றால், மழைக்காலங்களில் மின்விபத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதனால் அருகில் நீங்கள் இருந்தால் உங்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இன்று அங்காரக சிவராத்திரி: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்!
Vastu tips

வீட்டிற்கு எதிரிலே புதர்கள், செடிகள் தாவரங்கள் என்று வளர்ந்து இருக்கக்கூடாது. இப்படி அடர்த்தியான தாவரங்கள் இருக்கும் இடத்தில் இருந்து பாம்பு, தேள், பூரான் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. வீட்டு வாசலுக்கு நேராக எந்த ஒருமரமும் இருக்கக்கூடாது. குறிப்பாக முருங்கை மரம் இருக்கவே கூடாது. கதவை திறந்ததும் அந்த மரத்தை பார்க்காமல் இருக்க முயற்சியுங்கள். 

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் எதிரிலேயே சந்து இருக்கும் இடத்தை வாங்காதீர்கள். 

இதையும் படியுங்கள்:
கார்த்திகை சோமவார சிவ வழிபாட்டில் சங்காபிஷேக பூஜையின் பலன்கள்!
Vastu tips

வீட்டில் காலையில் எழுந்ததும் அதிர்ஷ்டம் தரக்கூடிய விஷயங்ளை பார்க்க வேண்டும். உள்ளங்கை, குலதெய்வம், குழந்தைகள், மலர், நாணயம் போன்ற மங்களகரமான விஷயங்களை பார்ப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com