
காலை எழுந்ததும் நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் நமக்கு செல்வத்தையும் தேடித்தரும் சில சமயங்களில் வறுமையையும் தரும். எனவே, நாம் காலையில் செய்யும் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
காலையில் நாம் எழுந்து செய்யக்கூடிய செயல் அந்த நாள் முழுக்க எப்படி இருக்கும் என்பதை தீர்மானிப்பதாக இருக்கும். சாஸ்திரத்தில் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள்.
1. காலை எழுந்ததும் கண்ணாடி பார்ப்பது அபசகுணமாக கருதப்படுகிறது. தூங்கி எழுந்து முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது அந்த நாளில் வெற்றியான செயல் எதுவும் நிகழாது என்று கூறப்படுகிறது. காலை எழுந்ததும் பூஜையறையில் இருக்கும் சாமி படத்தை பார்ப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது.
2. காலை எழுந்ததும் குளிக்காமல் உணவு அருந்தக்கூடாது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், 'காலை எழுந்ததும் உன்னை தூய்மை செய்துக் கொள்ளாமல் உணவை அருந்தினால் அது மிக பெரிய தோஷமாக கருதப்படுகிறது. இதனால் ஆரோக்கியம் சீர்க்குழைந்து நோய்வாய் ஏற்படும். வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாட்சம் போய்விடும்' என்று சொல்கிறார். எனவே, காலை குளித்துவிட்டு உணவு அருந்துவது மிகவும் முக்கியமாகும்.
3. காலை எழுந்ததும் நம்மை அறியாமல் தவறான வார்த்தை பேசுவது எதிர்மறையான விஷயங்கள் சொல்வதை செய்திருப்போம். இதை தவிர்க்க வேண்டியது அவசியம். காலையில் கடவுளின் பெயரை உச்சரிக்க வேண்டும். இதுவே அந்த நாள் முழுவதும் பாசிட்டிவாகவும், நிம்மதியாகவும் உணர்வதற்கான வழியாகும்.
4. காலையில் வீட்டில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று தானியங்களை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் நீண்ட ஆயுளும், லக்ஷ்மி கடாட்சமும் இருக்கும். தினமும் இரண்டு அல்லது மூன்று தானியங்களை ஊற வைத்து சாப்பிடுவதால், ஆரோக்கியம் பெற்று வஜ்ர தேகத்துடன் வாழ முடியும்.
5. காலை எதேனும் காரியமாக வெளியிலே செல்லும் போது பூஜையறையில் இருக்கும் பூ போன்ற பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு சென்றால் போகும் காரியம் நிச்சயம் வெற்றிப் பெறும்.
6.காலை எப்போதும் இனிப்புடன் அந்த நாளை தொடங்குவது நாள் முழுவதும் இனிமையைத் தரும் என்று சொல்லப்படுகிறது. புனிதமாகவும், மங்களமாகவும் கருதப்படும் குங்குமம், விபூதி, சந்தனத்தை காலையில் நெற்றியில் இட்டுக்கொண்டு செல்லும் நபருக்கு வெற்றி அதிகமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அவர்களை சுற்றியுள்ள எதிர்மறையான விஷயங்கள் தடுக்கப்படும்.
7. காலையில் வெளியில் கிளம்புவதற்கு முன் தயிரில் சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையும் தருகிறது.
8. மேலும் காலை எழுந்ததும் மகாலக்ஷ்மியின் அம்சமான துளசி செடிக்கு தண்ணீர் விடுவதன் மூலமாக வெற்றி, ஆரோக்கியம், சகல சௌபாக்கியத்துடன் இருப்பர் என்று சொல்லப்படுகிறது.
9. சாஸ்திரத்தில் நம்முடைய உள்ளங்கை தான் மகாலக்ஷ்மியின் அம்சம் கொண்டதாக கருதப்படுகிறது. எனவே, காலை எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பது நல்ல பணவரவைத் தரும். காலை எழுந்ததும் எக்காரணத்தை கொண்டும் வீட்டில் உள்ள உடைந்தப் பொருளை பார்க்காமல் இருப்பது நல்லது.
10. சாஸ்திரத்தில் கோமாதா காமதேனுவின் அம்சமாக கருதப்படுகிறது. எனவே, காலை எழுந்து கோமாதாவை தரிசிக்கும் போது அனைத்து தெய்வத்தையும் தரிசித்தப் பலனைத் தரும்.