1400 வருடப் பழமை... கழுகு கோவிலின் வியப்பூட்டும் வரலாறு!

Thirukazhukundram Temple
Thirukazhukundram Temple
Published on
  • திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலை 'கழுகு கோவில்' என கூறுவார்கள்.

  • வேதமே மலையானதால் 'வேதகிரி' என்று அழைப்பார்கள்.

  • 500 அடி உயரமுள்ள இம்மலையில் தினமும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து உணவு அருந்திவிட்டுச் செல்வதால் இதை 'பட்சி தீர்த்தம்' என்பார்கள்.

மதிய வேளையில் இரண்டு வெள்ளை கழுகுகள் வர அதற்கு பண்டாரங்கள் உணவு ஊட்டுவார்கள். பண்டாரங்கள் வைத்திருக்கும் வெண் பொங்கலையும் சர்க்கரைப் பொங்கலையும் கழுகுகள் சாப்பிட்ட பிறகு கோவிலை வலம் வந்து பறந்து விடுமாம். யார் இந்த கழுகுகள்?

பிரம்மபுத்திரருக்கு 8 மகன்கள். இவர்கள் அனைவரும் சிவபெருமானை தவமிருந்து அவர் காட்சி கொடுக்க தங்களுக்கு 'சாரூப பதவி' வேண்டும் என கேட்பதற்கு பதில் தவறாக 'சாயுட்சிய பதவி' என்று கேட்டு விட்டார்கள். அதற்கு அவர் "நீங்கள் எட்டு பேர் இரண்டு இரண்டு பேர்களாக பிறந்து இறைவனுக்குப் பணி செய்து வீரர்கள்" என்று வரம் தந்தார். இவர்கள் தான் முந்தைய யுகங்களில் சட்டன் - பிராண்டன்; சம்பாதி - ஜடாயு; சம்புகுத்தன் - மாகுத்தன், என இரண்டு இரண்டு பேர்களாக பிறந்து இறைவனை வழிபட்டார்கள்.

எட்டில் மீதி இருந்த பூஷா - விதாதா என்ற இரண்டு பேர்கள் கழுகுகளாக பிறந்து இன்று வரை பக்தர்களுக்கு தரிசனம் தருவதாக தல வரலாறு கூறுகிறது.

இந்த அற்புதமான நிகழ்வை ஆலயத்தில் டச்சுக்காரர்கள் கல்வெட்டில் எழுதியுள்ளார்கள். மலை அடிவாரத்தில் வேதங்கள் நான்கு சிகரங்களாக இருப்பதால் வேதகிரி என்று பெயர் பெற்ற இந்த ஆலயத்தில் வேதகிரீஸ்வரர் காட்சி தருகிறார்‌.

இதையும் படியுங்கள்:
மாதம் ஒரே ஒருமுறை மட்டுமே தரிசனம் தரும் உருகாதேஸ்வரி கோவில் பற்றி அறிவோமா?
Thirukazhukundram Temple

இந்த இரண்டு கழுகுகளும் காசி கங்கையில் ஸ்நானம் செய்கின்றன. இந்த கழுகுகள் மதிய உணவை உண்ண திருக்குழுக்குன்றம் வந்து பிறகு இரவு ராமேஸ்வரம் கோவிலில் கோபுரத்தில் நித்திரை செய்வதாக தல புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தை பல்லவமன்னன் மகேந்திரவர்மன் கட்டினான்‌. இது 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com