

திருமாந்துறை அட்சயநாகசுவாமி திருக்கோவிலில் அதிசய சந்திர கிணறு உள்ளது. இங்கு மூலவர் அட்சயநாதசுவாமி தாயார் யோகநாயகி அம்மாள். இது தஞ்சையில் அமைந்துள்ளது. தஞ்சை திருமாந்துறை யோகநாயகி அம்மாள் சமேத அட்சயநாதசுவாமி கோவிலில் சந்திரக் கிணறு தீர்த்தத்தில் குளித்து காலமா முனிவரும் நவக்கிரகங்களும் ரோக நிவர்த்தி அடைந்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.
இங்குள்ள தீர்த்தம் வளர்பிறையில் பொங்குவது ஒரு தேய்பிறையில் குறையும் அதிசய நிகழ்வு நடக்கிறது. இங்கு முருகன், மகாலட்சுமி விஷ்ணு, அரதத்தர், மாரியம்மன் சன்னதிகளும் உள்ளன. இக் கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்தை உடையது.
ஒரூமுறை பார்வதிதேவி சுகமுனிவரை கேலி செய்ததால் பூலோகத்தில் கிளியாக பிறக்குமாறு சிவபெருமானால் சபிக்கப்பட்டார். பார்வதி சிவனிடம் பிரார்த்தனை செய்தாள் அவரோ ஆம்ரவனத்தில் உள்ள சிவனின் சுயம்பு மூர்த்தியை கண்டுபிடித்து அங்கு அவரை வழிபடுமாறு கூறினார். அவளும் அப்பணியை செய்து இறைவனுடன் இணைந்தார்.
அவர் பார்வதியை இங்கேயே மணந்தார். இங்குள்ள மூலவர் சன்னதிக்கு வலப்புறத்தில் அவர்களின் கல்யாண கோலத்தைக் குறிக்கும் வகையில் சன்னதி அமைந்துள்ளது.
ஒருமுறை வறட்சியின் காரணமாக தேவலேகம் கடுமையான துன்பத்தை சந்தித்தது. இந்திரனும் வருணனும் ஈசனை வழிபட்ட பிறகு செல்வத்தையும் செழிப்பையும் மீண்டும் பெற்றனர். இது ஒருகாலத்தில் மாங்காடாக இருந்தது அதனால் மாந்துறை என அழைக்கப்பட்டது. சந்திரனுடன் தொடர்புடைய திங்கட் கிழமையில் இங்கு வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும். இதனால் இது சந்திர தோஷ பரிகார தலமாக விளங்குகிறது.
இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. செம்பியன் மாதேவியால் இக்கோவிலுக்கு திருப்பணி செய்யப்பட்டது. விருச்சிக ராசியில் வரும் ரோகிணி நட்சத்தினருக்கும், விருச்சிக ராசியினருக்கு உரிய பரிகார தலமாகும். முன்னொரு காலத்தில் காலமா முனிவருக்கும், நவக்கிரகங்களுக்கும் தொழுநோய் ஏற்பட்டது. அதிலிருந்து விடுபட சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான் அறிவுரைப்படி அட்சயநாதர் கோவிலில் அமைந்துள்ள சந்திரக்கிணறு தீர்த்தத்தில் பதினைந்து தினங்கள் நீராடி தங்கள் உடல் ரோகத்தில் இருந்து விடுபட்டனர். இந்தக்கோவில் ரோகிணி நட்சத்திரத்து கோவிலாக உள்ளது.
இக்கோவிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. திருமாந்துரை அட்சயநாதரை தரிசித்த பின் சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. வளர்பிறையில் பொங்குவதும் தேய்பிறையில் குறைவது மாக இருக்கும். ஆனால் சந்திரக் கிணற்று நீர் 2018 டிசம்பர் அமாவாசை தினத்தில் திடீரென குறைந்து காணப்படவேண்டிய நீர் பொங்கிவழிந்தது.
கங்கையே அட்சயநாதரை தரிசிக்க நீர் அதிகரிக்கும் நாளில் வராமல் குறைவாக இருக்கவேண்டிய தினத்தில் பொங்கி கோவில் முழுவதையும் நீரால் நனைத்தது இதனை அறிந்த மக்கள் கோவிலுக்கு வந்து நீராடினார்களாம். இக்கோவில் நவக்கிரக தொடர்புடையதால் இங்கு தனியாக நவக்கிரக சன்னதி இல்லை. சம்பந்தர் தன் பாடல்களில் இக்கோவில் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி கஞ்சனூர் ஆக்னீஸ்வரர் கோவிலுடன் தொடர்புடைய சப்த ஸ்தானம் என்ற ஏழு கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.