
அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர் பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா,
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!