
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்
தோழியரே, நாம் இனியும் பிறப்பெடுத்து உலகியல் துன்பங்களில் உழலக் கூடாது என்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும்? வேறேன்ன, சிவபெருமானைச் சரணடைய வேண்டும், அவ்வளவுதான்.