
‘பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்’
“நேற்று மாலை பேசும்போது, ‘என் மனசெல்லம் சிவபெருமானிடத்தில் ஆசை’ என்று சொன்னாயே, இப்போது பார்த்தால் உன் பாசம் எல்லாம் வேறு ஒன்றிடத்தில் இருக்கின்றதே. எதை இறுகப் பிடித்திருக்கின்றாய் என்று பார்த்தால் அமலியை. (அமலி என்பது படுத்து உறங்கக்கூடிய கட்டில்) அதன் பேரில்தான் உனது பாசமா?” என்று கேட்டனர் தோழிகள்.