
‘முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்’
முந்தைய ஆண்டுகளிலும் நாம் மார்கழி நோன்பு நோற்றோம். அப்போதெல்லாம் நமக்கு முன்பாகவே எழுந்து அங்கம் துலக்கி, சிவ சின்னம் தரித்து சிவ தரிசனத்துக்காக நமக்காகக் காத்திருக்கும் இந்தப் பெண், இந்த வருட மார்கழியில் மட்டும் ஏன் இத்தனை நேரம் உறங்கிக் கொண்டிருக்கிறாள்?