
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்
அந்தப் பெண்ணுக்கு எல்லாமே அலட்சியம்தான். அதனாலேயே சோம்பேறித்தனமும்கூட! ‘அதிகாலையில் நாங்களெல்லாம் வருகிறோம், நீயும் துயிலெழுந்து தயாராக இரு. அனைவருமாகச் சேர்ந்து ஆதி அந்தம் இல்லாத இறைவனை தரிசித்து வருவோம்,‘ என்று தோழிகள் முந்தைய நாள் சொன்னார்கள்.