
அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்
ஒரு பெண் அடையும் உயர்நிலை – தாய்மை. அந்தத் தாயின் பொறுப்புகளில் ஒன்று அதிகாலையிலேயே உறக்கம் நீக்கி எழுந்து அன்றாடக் குடும்பக் கடமைகளை சிறப்புற மேற்கொள்வதுதானே? அத்தகைய, அதிகாலையில் துயிலெழும் குணத்தை அந்த உயர்நிலை அடையு முன்னாலேயே பழகிக் கொள்வதில்தானே ஒரு பெண்ணின் பெருமை விளங்குகிறது!