திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மன்: பக்தர்களின் சொத்துகளை காக்கும் தெய்வ அருள்!

விஷக்கடி, தோல் நோய் தீர்க்கும் மருத்துவச்சி அம்மனாகவும், திருமண-குழந்தை பாக்கியம் அருளும் கிராமத்து தெய்வமாகவும் பக்தர்களின் நம்பிக்கையை பலப்படுத்தும் திருவெற்றியூர் பாகம்பிரியாள்.
bagampriya-amman
bagampriya-amman
Updated on

மிழகத்தில் பிரசித்தி பெற்ற கிராமத்து தெய்வங்களில் ராமநாதபுரம் திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூர்  பாகம்பிரியாள் அம்மன் கோவிலும் ஒன்றாகும்.  பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அருளுப வளாக இந்த அம்மன் உள்ளாள்‌  மருத்துத்றைக்கு சவாலாக உள்ள நோய்களும் அம்மன் தீர்த்தத்தால் நீங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இந்த தலத்தில் அறந்தாங்கியைச் சேர்ந்த குடும்பம் அம்மனை தரிசிக்க வந்தபோது அக்குடும்பம்தைச் சேர்ந்த பெண்மணி  சுற்று பிராகாரத்தில் தொங்கிய மாங்காய்களை பார்த்து ஒன்றை பறித்து சாப்பிட்டு, ஏழெட்டு மாங்காய்களை பறித்து பையில் போட்டு ஊருக்குச் சென்றார். பேருந்து நிலையத்தில் இறங்கி அறந்தாங்கி பஸ்ஸிற்காக காத்திருக்கும்போது  மாங்காய் பையில் ஏதோ நெளிந்துபோல் தெரிய அதைப்பார்த்த குடும்பத் தலைவர் பையைப் பார்க்க அதில் ஒரு பாம்பு படுத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். இதில் எப்படி பாம்பு வந்தது என்று யோசிக்க பெண்மணி நடந்ததை கூறினார்.

பிறகு பயந்துபோன அவர்கள் பையை திரும்ப கோவில் மரத்துக்கு கீழே வைத்து விட்டு சென்றுவிட்டார்கள்‌  அந்த குடும்பத்தினர் கோவில் அர்ச்சகரிடம் கூற அர்ச்சகர் பையை திறந்து பார்த்தபோது மாங்காயாக மாறியிருந்தது. இந்த உண்மைச் சம்பவம் குறித்து பலருக்கும்  தெரியும்.

இன்னொரு சம்பவமும் கூறப்படுகிறது. அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த குடும்பம்  ஒன்று மாவிடிக்கும்போது செல் போனை அங்கேயே மறந்து வைத்துவிட்டார்கள். ஒரு தம்பதியர் அந்த போனை எடுத்துச் சென்றுவிட்டார்கள். ஒருமணி நேரத்திற்குப் பிறகு ஃபோனை தொலைத்தவர்கள் தேடி கிடைக்காத காரணத்தால். கோவிலில் உள்ள சிசிடிவி காமெரா மூலம் பார்க்க ஒரு தம்பதியர் அதை எடுத்துச் சென்றது தெரியவந்தது. 

போனை பறிகொடுத்தவர்கள் விலாசம், போன் நம்பரை கோவிலில் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு அதே கோவிலுக்கு வந்த ஒரு அன்பர்  தங்கள் குழந்தை இந்த போனை தெரியாமல் எடுத்து வந்துவிட்டதாகவும் அதை உரியவரிடம் சேர்க்க கூறினார். அந்த அன்பர்தான் எடுத்தார் என்பதுதான் தெரியுமே.

இதையும் படியுங்கள்:
ஒரே சங்கு வடிவ ஸ்ரீ வல்லப சேத்திரம்: திருவாழ் மார்பன், இரட்டை கொடிமரம், மழலை பாக்கியம் அருளும் அதிசய தலம்!
bagampriya-amman

கோவில் அதிகாரி அன்பர்தான் போன் எடுத்தார் என்பது தெரியும் இருந்தாலும் திருப்பிக் கொடுப்பதால் என்ன நடந்தது என்று கேட்க அந்த அன்பர் இந்த போன் இருந்த இடத்தில் ஒரு பாம்பு இருந்ததால் பயந்து திருப்பி கொடுக்க வந்ததாகக் கூறினாராம்.

இக்கோவில் அம்மன் பக்தர்களின் பொருட்களை காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது.  இக்கோவிலில் வியாழன் தங்கி வெள்ளி காலையில் கோவில் வாசுகி தீர்த்த்தில்  நீராடி  பாகம் பிரியாள் உடனுறை  பழம்புத்திர நாதர் என்ற வல்மீகநாதரை  வழிபடுவதால் தோல் நோய்கள் விஷக்கடிகள் நீங்கும்  என்பது ஐதீகம்.

திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் அருளும் தலம். இத்தலத்தில் வியாழன் தங்கி வெள்ளியன்று வழிபடுகிறார்கள்.  இந்த அம்பிகை தாயுள்ளம் கொண்டவள். அதனால் இவ்வூர் மக்கள்  தாய்வழி சொத்தை மகள்களுக்கு எழுதி வைக்கின்றனர்.எல்லா நோய்களையும் தீர்க்கும் இந்த அம்மனை மருத்துவச்சி அம்மன் என்று அழைக்கிறார்கள்.

திருமண தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள வில்வ மரத்தின்கீழ் உள்ள  கணேசனுக்கு  பால் அபிஷேகம் செய்தும், அருகிலுள்ள நாகர் சிலைகளுக்கு மாங்கல்யம் சமர்ப்பித்தும் வழிபடுகிறார்கள். தென் மாவட்டங்களில் பாகம் பிரியாமல் கலங்கரை விளக்காக தன் திகழ்கிறாள்.

logo
Kalki Online
kalkionline.com