
பூஜையறையில் சிலருக்கு தினமும் நாணயம் சேர்த்து வைக்கும் பழக்கம் இருக்கும். இப்படி நாணயத்தை சேர்த்து வைப்பதால் அது மென்மேலும் நாணயங்களை ஈர்த்துக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பூஜையறையில் பல புனிதமான பொருட்களை வைத்திருப்பார்கள். கலசம், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய், குலதெய்வத்தின் மண் போன்றவற்றை வைத்திருப்பார்கள். மேலும் செல்வத்தின் அடையாளமான நாணயத்தையும் பூஜையறையில் குமித்து வைத்திருப்பார்கள். இப்படி செய்வதால் இது செல்வத்தை ஈர்த்து தரும் என்று சொல்லப்படுகிறது.
மாத சம்பளத்தில் இருந்து வரும் பணத்தை மாற்றி நாணயங்களாக சேமிக்க வேண்டும். விசேஷ நாட்களான வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் பெரியவர்களிடம் ஆசிப்பெற்று நாணயங்களை வாங்கி அதை சேமிக்க வேண்டும்.
இதுப்போன்று பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் நாணயங்களை சாதாரணமாக எடுத்து பயன்படுத்தக்கூடாது. ஏதேனும் மங்களப் பொருட்களான மாங்கல்யம், கல் உப்பு, மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களை வாங்க பயன்படுத்த வேண்டும்.
யாருக்காவது ஆசிர்வாதம் வழங்கும் போது இந்த நாணயத்தை எடுத்துக் கொடுக்கலாம். அவ்வாறு செய்வதின் மூலம் மென்மேலும் செல்வ வளத்தையும், நேர்மறை ஆற்றலையும், ஆத்ம திருப்தியையும் கொடுக்கும்.
அப்படியில்லாமல் வேறு ஏதேனும் சில்லறை செலவுக்கு இந்த காசை பயன்படுத்தும் போது நம்முடைய அதிர்ஷ்டம் அவர்களுக்கு சென்றுவிடும் என்று சொல்லப்படுகிறது. இதுவே நாணயத்தை ஆசிர்வதித்து ஒருவருக்கு தரும்போது நமக்கு ஐஸ்வர்யம் இரட்டிப்பாகும். மேலும் இதுப்போன்ற நாணயத்தை சேமித்து வைப்பதை தொழில் செய்யும் இடத்திலும் பின்பற்றலாம்.
வீட்டில் தங்க நகை வாங்கக்கூடிய பெட்டியில் நாணயங்களை வைக்க வேண்டும். கண்ணாடி உள்ள பெட்டியில் நாணயங்களை வைப்பதால்அது பிம்பத்தில் இரட்டிப்பாக காட்டும். இது செல்வத்தை ஈர்த்துக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
பூஜையறையில் நாணயங்கள் வைத்திருக்கும் பாத்திரம் தூசியுடன் இருக்கக்கூடாது. மேலும் இந்த நாணயத்துடன் வாசனைப் பொருட்களான பச்சைக்கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் போன்ற செல்வத்தை ஈர்க்கக்கூடிய பொருட்களை சேர்த்துப் போடும் போது நிறைய ஐஸ்வர்யத்தை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கும் பூஜையறையில் நாணயங்களை சேமிக்கும் பழக்கம் இருக்கிறதா? என்று சொல்லுங்க பார்க்கலாம்.