தீராத நோய் தீர்க்கும் 'வேத' இலை: திருச்செந்தூர் பிரசாத ரகசியங்கள்!

Secrets of Tiruchendur Prasadam
Secrets of Tiruchendur Prasadam
நடேஷ் கன்னா

என் பெயர் நடேஷ் கன்னா. எனது உண்மை பெயர் சிவராம சுப்ரமணியன். எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு. தற்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 57 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறேன். சிறுகதை கட்டுரைகள் கவிதைகள் துணுக்குகள் ஜோக்ஸ் என எழுதி உள்ளேன். நான் கல்கி, தீபம், மங்கையர் மலர், குமுதம், விகடன், சாவி இதயம் பேசுகிறது முத்தாரம், ராணி, தேவி, ஜூனியர் விகடன், நக்கீரன், துக்ளக், தினமலர், போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் எழுதியுள்ளேன். எனக்கு ஆரம்ப காலத்தில் எழுத தூண்டியது கல்கி வார இதழ். அதில் நான் எழுதிய முதல் துணுக்கு இடம் பெற்றது அன்றிலிருந்து இன்று வரை எழுதி வருகிறேன். நான் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. என்னை எழுத தூண்டிய கல்கிக்கு வாழ்த்துக்கள்.

Updated on

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தனித்துவமான பிரசாதமான பன்னீர் இலை விபூதி மிகவும் சக்தி வாய்ந்தது. தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின்போது மூலவர் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிறகு வழங்கப்படுகிறது. சூரசம்ஹாரத்திற்கு பின் வேதங்கள் பன்னீர் மரங்களாக மாறியதாக புராணங்கள் வரலாறும் காணப்படுகிறது. இந்தப் பன்னீர் இலை விபூதி உடலில் உள்ள அத்தனை நோய்களையும் தீர்க்கக்கூடிய வல்லமை படைத்தது.

இந்தக்கோவிலில் மட்டுமே இந்தப் பன்னீர் இலை விபூதி வழங்கப்படுகிறது. ஆதிசங்கரரின் சுப்பிரமணிய புஜங்கத்தில் இந்த இலை விபூதி வலிப்பு நோய் பில்லி சூனியம் குஷ்டம் மற்றும் நாள்பட்ட வியாதிகளை குணமாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலைகள் பார்ப்பதற்கு முருகனின் வேல் வடிவத்தில் இருக்கும். திருச்செந்தூரில் சூரசம்ஹரம் முடிந்த பிறகு கடற்கரையில் முருகனை தரிசித்த வேதங்கள் பன்னீர் மரங்களாக தோன்றியதாக புராணங்கள் கூறுகிறது. இது மனதுக்கு புத்துணர்ச்சியும் மற்றும் தீய சக்திகளில் இருந்து காப்பதாக நம்பப்படுகிறது.

திருச்செந்தூர் மூலஸ்தானத்தில் பாலசுப்பிரமணியர் சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணியசுவாமி கிழக்கு பார்த்தும் சண்முகர் தெற்கு திசை பார்த்தும் அருள்பாலித்து வருகிறார்கள். இங்குள்ள மூலஸ்தானத்தில்தான் இந்த இலை விபூதி பூஜிக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக உள்ளது. குரு பகவானுக்கு உரிய ஆலயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடல் மட்டத்தைவிட சுப்பிரமணியர் மூலவர் சன்னதி கீழாக அமைந்துள்ளது. பாலசுப்பிரமணியர் தனியாகவும் சண்முகர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார்கள். மூலஸ்தானத்தில் சந்தனத்துடன் கலந்து விபூதியும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இங்கு உள்ள அர்ச்சகர்கள் விலை விபூதியை நம் மீது படாமல் கையில் போட்டு விடுவார்கள்.

முருகப்பெருமானுக்கு பன்னிரு கைகள் உள்ளது. அதேபோன்று இந்த பன்னீர் இலை 12 நரம்புகள் கொண்டது. பன்னிரு இலை என்பது மருவி பன்னீர் இலை என அழைக்கப்படுகிறது. இந்த இலையானது முருகன் வேலுக்கு சமமாக கருதப்படுகிறது.

இந்த பன்னீர் இலைக்கு வேத மந்திர சக்தி உள்ளது. 350 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் மேல கோபுரத்தின் கட்டுமான பணி திருவாவடுதுறை ஆதீனத்தால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு உழைத்த தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதற்கு வழி இல்லை

அந்த தொழிலாளர்களுக்கு இலை விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் வெளியில் போய் பிரித்து பார்த்துக்கொள்ளவும் என்று சொல்லி அவர்களுக்கு அந்த பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த தொழிலாளர்களும் அந்த பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை பிரித்துப் பார்த்தபோது அந்த இலை விபூதி பிரசாதத்தில் அவர்கள் வேலை பார்த்ததற்கு உண்டான கூலி அதில் இருந்ததாம் இதை மிகவும் ஆச்சரியமாக சொன்னார்கள்.

இதையும் படியுங்கள்:
சென்னையில் ஒரு சூரிய தலம்: கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் சிறப்புகள்!
Secrets of Tiruchendur Prasadam

இந்த இலை விபூதி பல அரிய நோய்களை தீர்க்கக்கூடிய அருமருந்தாக விளங்கியது. விசுவாமித்திரருக்கு தீராத காசநோய் இருந்தது, அவர் இங்குள்ள முருகனை வழிபட்டு இலை விபூதியை வாங்கி பிரசாதமாக உடலில் பூசிகொண்டதும் அவரது காசநோய் நீங்கியதாக புராணங்கள் கூறப்பட்டுள்ளது. வேதங்களே பன்னீர் இலைகளாக காணப்படுகிறது.

நாள்பட்ட நோய்கள் குணமாகி உள்ளதாக சுப்பிரமணிய புஜங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மன வியாதியையும் போக்கக்கூடிய அருமருந்தாகும். சூரசம்காரம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு கடற்கரையில் வைத்து தனது 12 கைகளாலும் இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை வழங்கியதாக வரலாறு கூறுகிறது.

அதன் பின்னர் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த இடத்தில் பன்னீர் மரங்களாக மாறியதாக வரலாறு. எனவே இந்த இலைகளுக்கு வேதமந்திர சக்தி அதிகம் உள்ளது.

ஆதிசங்கரர் தனக்கு ஏற்பட்ட தீராத வியாதிக்காக இங்குள்ள முருக பெருமானை வழிபட்டு இலை விபூதியை பூசிக்கொண்டதால் அவரது நோயும் குணமாகியது என புராண வரலாற்றில் உள்ளது.

இத்தகைய அபூர்வ சக்தி வாய்ந்த இந்த இலை விபூதியை தவறாமல் அனைவரும் பெற்று முருகப்பெருமானின் ஆசி கிடைக்கவும், நோய்கள் குணமாகவும், இந்த திருச்செந்தூருக்கு நிறைய அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com