திருப்பதி கோயிலில் கருட சேவை
திருப்பதி கோயிலில் கருட சேவை

திருப்பதி ஏழுமலையான் கருட சேவை.. பக்தர்கள் பரவசம்!!

Published on

திருப்பதியில் ஏழுமலையானின் கருட வாகன சேவை கோயில் மாட வீதியில் கோலாகலமாக நடைபெற்றது.

பௌர்ணமி தினமான நேற்று மாதாந்திர பௌர்ணமி கருட சேவை திருப்பதி மலையில் நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலில் பௌர்ணமி நாட்களில் ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெறும்.

அந்த வகையில் பௌர்ணமி தினமான நேற்று நடைபெற்ற கருட வாகன சேவையின் போது, உற்சவர் மலையப்ப சாமி கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு, தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

அத்துடன், பெண்களின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன சேவையின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி ஏழுமலையானின் கருட வாகன சேவையை கண்டு கற்பூர ஹாரத்தி சமர்ப்பித்து வழிபட்டனர்.

logo
Kalki Online
kalkionline.com