
ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில், கோவிந்தராஜசாமி கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ஆகிய மூன்று கோவில்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த கோவில்களில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் மற்றும் சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன. அந்த வகையில் ஜூன் மாதம் நடைபெற உள்ள சிறப்பு விழாக்கள் மற்றும், உற்சவங்கள் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் :
ஜூன் 5-ம்தேதி: வரதராஜர் திருநட்சத்திர கொண்டாட்டம் நடக்கிறது
ஜூன் 9-ம்தேதி: ஜேஷ்டாபிஷேகம் ஆரம்பம்; நம்மாழ்வார் சாத்துமுறை
ஜூன் 11-ம்தேதி: ஜேஷ்டாபிஷேகம் நிறைவு.
ஜூன் 21-ம்தேதி: ஸ்மார்த்த ஏகாதசி.
ஜூன் 22-ம்தேதி: வைஷ்ணவ/மத்வ ஏகாதசி.
ஜூன் 26-ம்தேதி: பெரியாழ்வார் உற்சவம் ஆரம்பம்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நடக்கும் விழாக்கள் :
* ஜூன் 1-ந்தேதி மாலை பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம்
* ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரை நம்மாழ்வார் திருவிழா.
* ஜூன் மாதம் 2 முதல் 10-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம்
* ஜூன் 20, 27-ந்தேதிகளில் மாலை 6 மணியளவில் ஆண்டாள் தாயார் ஊர்வலம்
* ஜூன் 24-ந்தேதி ரோகிணி நட்சத்திரத்தையொட்டி மாலை 6 மணிக்கு பார்த்தசாரதிசாமி, ருக்மணி, சத்யபாமா தாயார்களுடன் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெறும் சிறப்பு உற்சவங்கள் :
* திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவம்
* 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தெப்போற்சவம்
* 14-ந்தேதி உத்திராட நட்சத்திரத்தையொட்டி மாலை 6.45 மணிக்கு பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.