ஆயுள், செல்வம், புத்திரப்பேறு தரும் வைகாசி மாதம்: சிவன், விஷ்ணு, முருகன், புத்தர் அவதார ரகசியங்கள்!

கங்கை நீராடல், துளசி பூஜை, ரிஷப விரதம், எள் தானம், அனுமன் வழிபாடு போன்ற வைகாசி மாத சிறப்பு வழிபாடுகள் மூலம் பாவநிவிர்த்தி, குடும்ப அமைதி, செல்வ செழிப்பு கிடைக்கும் எனும் ஐதீக விளக்கம்
vaikasi-month
vaikasi-month
Updated on

ளம் தரும் வைகாசி மாதத்தை   'மாதவ மாதம்' என்றும் வைகாசம் என்றும் போற்றுவர். வைகாசி முதல் தேதியில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மகாவிஷ்ணுவை துளசி இலைகளால் பூஜை செய்தால் நற்பேறுகள் பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆனது ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் தோன்றியது.

வைகாசி சுக்ல  சதுர்த்தசியில்தான் மஹாவிஷ்ணு தன்பக்தன் பிரகலாதனுக்காக ஒரு நொடி பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

கௌதம புத்தர் அவதரித்தது ஓர் வைகாசி பவுர்ணமி என்று வரலாறு கூறுகிறது. அவர் கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றது வைகாசி பௌர்ணமி ஆகும்.

வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளில் திருஞான சம்பந்தரின் திரு நட்சத்திர தினம் அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது. வைகாசி மாதம் திருக்கோட்டியூர் நம்பிகள் அவதரித்தார்.

காஞ்சி மகா பெரியவர் அவதரித்ததும் வைகாசி பௌர்ணமி நாளில்தான். ஆதிசங்கரர் தோன்றியதும் வைகாசி பஞ்சமிநாள்.

வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு  மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி 108 பத்ம ராக கற்களால் ஆன மாலை அணிவித்து எள் சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

வைகாசி மாதத்தில் சிவபெருமானை போற்றி கடைப் பிடிக்கப்படும் விரதம் ரிஷப விரதம் ஆகும்.

வைகாசி விசாகத்தில் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணங்கள் கூறுகிறது. மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீவாஞ்சியம் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

சிவபெருமான், பார்வதி திருமணமும் முருகப்பெருமான் - தெய்வானை திருமணமும் நடைபெற்ற மாதம் வைகாசி ஆகும்.

தமிழ் கடவுள் முருகன் வைகாசி மாதம் விசாக நட்சத்திரம்  அன்று அவதரித்தார்.

வைகாசி மாதத்தில் 63 நாயன்மார்களில் திருஞான சம்பந்தர் கலர் சிங்காரம் நன்றி அடிகள் திருநீல நக்க முருக நாயனார் ஆகியோர் பிறந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பங்குனி உத்திரம்: வெறும் பட்டினி கிடப்பது விரதமல்ல... உண்மையான விரதம் எது தெரியுமா?
vaikasi-month

வைகாசி மாத வழிபாட்டின் பயன்கள்:

வைகாசி மாதத்தில் வழிபாடுகள் மேற்கொண்டால் ஆயுள், செல்வம் புத்திரப்பேறு ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், செல்வமும் செழிக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி மாதம் என்பது பருவ நிலையில் மாற்றம் ஏற்படும் மாதம் ஆகும். இந்த மாதத்தின் வெபலின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கி வசந்த காலத்தின் இதமான காற்று வீச துவங்கும். இதனால் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கி சுகத்தையும் ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது.

இந்த மாதத்தில் தானம் செய்வது மிகவும் நல்லது. குறிப்பாக எள் தானம் செய்வது விஷ்ணு பகவானை மகிழ்விக்கும்.

அனுமன் வழிபாடு செய்வதால் கஷ்டங்களை நீக்குவார். இந்த மாதத்தில்தான் ராமர் ,அனுமாரை சந்தித்தார். இந்த மாதம் அதுமனுக்கு மிகவும் பிடித்த மாதம். இந்த மாதத்தில் ராமர் மற்றும் அனுமனை தவறாமல் வழிபடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

வரும் வசந்த கால வைகாசி மாதத்தை  போற்றி வழிபடுவோம்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com