ஆரவல்லி சகோதரிகளை வீழ்த்திய வனபத்ரகாளியம்மன் கோவில் ரகசியம்!

Vanabhadrakali Amman - வனபத்ரகாளியம்மன் கோவில்
Vanabhadrakali Amman - வனபத்ரகாளியம்மன் கோவில்AI Image
Updated on

ரித்திர காலத்தில் நெல்லூர் பட்டணம் எனும் பகுதியை ஆரவல்லி, சூரவல்லி, வீரவள்ளி  ஆகியோரின் உடன் பிறப்புகளின் எழுவர் ஆட்சி செய்தனர். மந்திர தந்திர சூன்யங்களில் வல்லவர்களாக இருந்த அந்தப் பெண்களை வீழ்த்த முடியாமல் பல மன்னர்கள் வீழ்ந்தனர்.‌ அந்தக் காலத்தில்  துரியோதனாதிகளும் பாண்டவர்களும்  தத்தம் நாடுகளை ஆண்டு வந்தனர்.

பாரதப்போர்  மூள்வதற்கு முந்தைய சமயம் அது.‌ ஒருநாள் கிருஷ்ண பகவான் பாண்டவர்களிடம்  ஆரவல்லி, சூரவள்ளி களின் தீயநெறிகளைக்கூறி அவர்களை போரிட்டு வென்று வருமாறு கூறினார்.

அப்போது பீமன் தான் சென்று அவர்களை வெல்வதாகக் கூறிச் சென்றார். நெல்லூர் பட்டிணத்திற்கு பீமன் வரும் செய்தியை நாரதர் மூலம் அறிந்த ஆரவல்லிப் பெண்கள்  மந்திரத்தாலும், சூனியத்தாலும் பீமனை எதிர்த்தனர்.‌ மந்திரத்தால் கரடிகள் வேங்கைகளை ஏவ  பீமன் அவற்றை விரட்டியடித்தான். அதன் பிறகு நடந்த சூது விளையாட்டில் பீமன் தோற்று ஆரவல்லியிடம்  சிறை பட்டான்.

இதை அறிந்த கிருஷ்ணர் தன் மாயையால் பீமனை மீட்டார். பீமன் நடந்ததை தன் அண்ணன் தம்பிகளிடம் கூறினார்.  பீமன் தப்பிவிட்டதை அறிந்த ஆரவல்லி  ஓடிவிட்ட நீ ஒரு ஆண்பிள்ளையா என ஓலையொன்ற அனுப்பினாள். இதனால் வெகுண்ட   பஞ்ச பாண்டவர்கள் தங்கள் தங்கையாகிய   சங்கவதியின் குமாரன் அல்லி முத்துதான் ஆரவல்லிப் பெண்களை வெற்றிகொள்ளத் தகுதியானவன் என்று  அல்லி முத்துவை அழைத்து வந்தனர்.

இதையும் படியுங்கள்:
பெருமாள் பக்தருக்கு சிவன் காட்டிய அற்புதம்: ஒரே இரவில் மாறிய ராகவாச்சாரியின் கதை!
Vanabhadrakali Amman - வனபத்ரகாளியம்மன் கோவில்

ஐவரும் மற்றவர்களும் ஆரவல்லியின்  தந்திரங்கள் பற்றிக் கூறி போரிட வேண்டிக்கூற அல்லி முத்து படை வீரர்களுடன் சென்றான்.  நெடிய பயணத்திற்குப் பிறகு வனபத்திரக்காளியை வேண்டிக்கொண்டான்.  ஆரவல்லிப் பெண்களை சிறைபிடிக்க  வெண்ணீரும், சக்தி வாளும் காளி கொடுத்தருளினாள். இவற்றால் அல்லி முத்து புறப்பட அவர்கள் கரடிகள் வேங்கைகளை ஏவ அவற்றை கொன்றான்.

அல்லி முத்துவை மாற்று வழியில் சிக்க வைக்க நினைத்து தங்களை மன்னிக்கும்படி கூறி  அவர்கள் தங்கை பல்வரிசையை மணம் செய்ய வேண்டினர்.‌ பாண்டவர்களிடம் சென்று ஊரறிய மணமுடிப்பேன் என்றான்.

பல்வரிசையுடன் புறப்பட்ட அல்லி முத்து மயக்கமடைய,  ஆரவல்லி கொடுத்த எலுமிச்சையை  பல்வரிசை பிழிந்து கொடுக்க அது மந்திரம் ஏவிய பழமாதலால் அல்லி முத்து இறந்தான்.

அல்லிமுத்துவைப் பற்றிக் கேள்விப்பட்ட பாண்டவர்கள் வெகுண்டனர். அபிமன்யு வானுக்குச் சென்று இந்திரன் உதவியுடன் அல்லி முத்துவை உயிர்ப்பித்தான்.

அல்லிமுத்துவிடம் விவரம் அறிந்த அபிமன்யு சிங்கம் போல் வெகுண்டான்.‌ ஆரவல்லி பட்டணம் வந்தவுடன் பத்ரகாளியை வேண்டி ஆரவல்லியை அழிக்க பூதப்படை அனுப்ப வேண்டினான். 

ஆரவல்லி பட்டணத்தை சிதற அடித்தார்கள்.  ஆரவல்லி பெண்களில் ஒருத்தி மட்டும் தப்பிப் போனாள்‌ அறுவர் சிறைபட்டனர். இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கும்  வனதேவியை வணங்கி நாட்டுக்குச் சென்றனர். பல்வரிசைக்கு வாலம்மா என பெயர் மாற்றி அல்லிமுத்துக்குத் திருமணம் செய்து வைத்தனர். 

அருள்மிகு வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு மேற்கே உள்ள பவானி ஆற்றின் அருகிலேயே  ஆரவல்லிப் பட்டிணமாகிய  நெல்லூர் பட்டிணம் இருந்தது எனவும் ஆரவல்லி கதை நிகழ்ந்த இடம் இது என்று நம்பப்படுகிறது.

Vanabhadrakali Amman - வனபத்ரகாளியம்மன் கோவில்
Vanabhadrakali Amman - வனபத்ரகாளியம்மன் கோவில்AI Image

கோவில் சிறப்பு;

பகாசுரன் மற்றும் பீமன் இங்கு காவல் தெய்வங்களாக உள்ளனர்.

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இங்கு சுவாமி முன் பூ போட்டு பார்க்கும் வழக்கம் உண்டு.

இங்கு புதன் செவ்வாய், ஞாயிறு அன்று 300லிருந்து 400 கிடா வெட்டப்படுகிறது.

செய்வினை பில்லி சூன்யம் அகற்றும் தலம் இது.‌

கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து 6கிமீ தொலைவில்  வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

இங்கு ஆடிக்குண்டம் இறங்க  அன்னையிடம் அனுமதி பெற்று 361 அடி நீளமுள்ள திருக்குண்டம் அமைக்கப்படும்.

வேண்டிய காரியங்கள் நன்றாக முடிந்தால் பெண்கள் தாலியை உண்டியலில் போட்டுவிடுவர். 

இங்கு அம்மனுக்கு எலுமிச்சமாலை சமர்ப்பிக்க பல வியாதிகள் குணமாகும்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயத்தின் பின்னால் இருக்கும் மகாபாரத காலத்து அமானுஷ்ய வரலாற்று உண்மைகளையும், தீராத பிணிகள் மற்றும் செய்வினை கோளாறுகளில் இருந்து விடுபட அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும் என்கிற ஆன்மீகத் தெளிவையும் நீங்கள் முழுமையாகப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com