பெருமாள் பக்தருக்கு சிவன் காட்டிய அற்புதம்: ஒரே இரவில் மாறிய ராகவாச்சாரியின் கதை!

Shiva Vishnu unity - ஆன்மீக அற்புதம்
Shiva Vishnu unity - ஆன்மீக அற்புதம்AI Image
Updated on

ராகவாச்சாரி தீவிர பெருமாள் பக்தர். காலை மாலை இரு வேளையும் வீட்டில் இருந்து கிளம்பி கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பெருமாள் கோயில் சென்று விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி விட்டு தியானம் செய்துவிட்டு வருவார்.

அன்று மாலையில் கிளம்பி நடந்து வரும்போது அந்த சாலையில் ஏதோ வேலை நடப்பதால் சுற்றி செல்லும்படி வேலை செய்பவர்கள் கூறவே சரி என திரும்பும்போது சைக்கிளில் வந்த ஒருவர் "ஐயா.. நான் அந்த வழிதான் போகிறேன். வாருங்கள் உங்களை பெருமாள் கோவிலில் இறக்கி விடுகிறேன்" என்று கூறவே சைக்கிளில் ஏறினார் ராகவாச்சாரி.

வழியில் சிவன் கோயில் அருகே சைக்கிளில் வந்தவர் " ஐயா.. தினமும் சிவனுக்கு வில்வ மாலை கொடுப்பேன். கொடுத்துவிட்டு போகலாம் வாங்களேன் என்றதும்,

தீவிர வைஷ்ணவ கொள்கையை கடைப்பிடிக்கும் ராகவாச்சாரி" நான் வரவில்லை. நீங்க கொடுத்துட்டு வாங்க" என்றதும் அவரும் வில்வ மாலை கொடுத்து விட்டு ராகவாச்சாரியை பெருமாள் கோவிலில் இறக்கிவிட்டு "ஐயா போகும் போது பத்திரமா போங்க இருட்டாகிடும் ரோடும் சரியில்லை" என்று சொல்லவே, அதெல்லாம் நான் பத்திரமா போயிடுவேன் நன்றி என்று கூறி விட்டு பெருமாளை சேவித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினார்.

Shiva Vishnu unity - ஆன்மீக அற்புதம்
Shiva Vishnu unity - ஆன்மீக அற்புதம்AI Image

ரோடு ஒரே மேடு பள்ளம்... மழை வேறு பெய்திருந்ததால் ஒரே சேறும் சக்தியும்... தட்டுத் தடுமாறி நடந்து கொண்டிருந்தபோது " தாத்தா நில்லுங்க அங்கே போகாதீங்க திரும்பி போங்க" என்ற குரல் கேட்க திரும்பினால் சரசர வென பாம்பு ஒன்று தனக்கு முன் சாலையை கடந்து செல்வதை பார்த்தார் ஒரு நிமிடம் நிலை குலைந்து போய்விட்டார்.

அவரை நிற்க சொன்ன சிறு பையன் " தாத்தா வாங்க இங்க பாம்பு நிறைய நடமாடும் நீங்க வந்து சிவன் கோவில் ல உட்காருங்க அங்க ஒரு வாட்ச்மென் இருப்பாரு அவரை உங்களை வீட்டுக்கு கொண்டு போய்விட சொல்றேன் வாங்க என்று கையை பிடித்து கோவிலுக்கு அழைத்து சென்று வாட்ச்மேனிடம் தாத்தாவை வீட்டில் விட்டுடுங்க என்று சொல்லி விட்டு ஓட்டமாக ஓடிவிட்டான்.

வாட்ச்மெனும் ஒரு மணி நேரம் கழித்து டியூட்டி முடிந்ததும் நான் உங்களை கொண்டுவிடறேன் ஐயா கோவில்ல உட்காருங்க என்று சொல்லி சென்று விட்டார்.

ஒரு மணிநேரம் ஆகியும் வாட்ச்மென் வரவில்லை. அந்த சிறுவனையும் காணவில்லை. தன் நண்பன் மகாதேவன் கோவிலுக்கு வந்து வீட்டிற்கு கிளம்பும்போது ராகவாச்சாரியை பார்த்ததும் "என்னடா ராகவா அதிசயமா சிவன் கோயில் பக்கம் வந்திருக்கே என்றதும் விஷயத்தை கூறவ " இங்க வாடச்மேன் கிடையாதே இந்த பக்கம் தனியா குழந்தை வர வாய்ப்பே இல்லை.

சரி சரி வா உன்னை வீட்டில் விடறேன் என்று பைக்கில் அழைத்து செல்ல பின்னால் அமர்ந்திருந்த ராகவாச்சாரி மனதில் "சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பேதம் பார்த்த எனக்கு அந்த பகவானே குழந்தை மூலமா என்னை காப்பாற்றி ஹரியும் சிவனும் ஒன்று என்று உணர்த்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
அழகர்மலை உச்சியில் அரோகரா முழக்கம்: ஜூலை 5-ல் சோலைமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்!
Shiva Vishnu unity - ஆன்மீக அற்புதம்

ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா என்று கூறிக்கொண்டே மஹா தேவா இனிமே நானும் உன்னோட கோவிலுக்கு வரேண்டா என்றார் பகவானின் (ஆன்மீக அற்புதம்) லீலையே லீலை அன்றோ?

இந்தக் கதையை வாசிப்பதன் மூலம், கடவுள்களுக்கு இடையே பேதம் பார்ப்பதால் ஏற்படும் அறியாமை நீங்கி, 'அரியும் சிவனும் ஒன்று' என்ற உயரிய ஆன்மீக முதிர்ச்சியையும், ஆபத்துக் காலத்தில் இறைவன் எந்த ரூபத்திலும் வந்து காப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையையும் நீங்கள் முழுமையாகப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com