வாழ்வை மாற்றும் வாராகி வழிபாடு: தீராத கடன்களும் இனி தீரும்!

Varahi Amman worship
Varahi Amman worship
Published on

ன்று ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் முக்கியமான காரணம் பணப் பற்றாக்குறையாகத்தான் இருக்கும். தடைகள் நீங்கி, பண வரவு அதிகரித்து கடன் தொல்லை நீங்கி நிம்மதியாக வாழ (Varahi Amman worship) வாராகி அம்மனை வழிபடுவதன் மூலம் அடையலாம். பக்தர்கள் மனம் உருகி கூப்பிட்ட குரலுக்கு உடனே வந்து நிற்கக்கூடிய அற்புதமான தெய்வம் வாராகி அன்னை. வாராகியன்னை வழிபாடு குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

பண வரவு அதிகரித்தாலே பாதி பிரச்னைகள் குறைந்து விடும். இதற்கு வாராகி அம்மனுக்கு ஏலக்காய் மாலையை சாத்தி வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை நீங்கள் வீட்டில் செய்யக் கூடாது ஆலயத்திற்கு சென்றுதான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வரை செய்யும்பொழுது பண வரவு அதிகரிக்கும் வாய்ப்புகள் பெருகும். இதனால் உங்கள் கடனை அடைக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அடுத்து, கடன் அடைய வாராகியம்மனை எப்படி வழிபாடு செய்வது என்று பார்க்கலாம். பணம் வந்தாலே கடன் அடைந்து விடுமே, பிறகு எதற்கு இதற்கென தனி வழிபாடு என யோசிக்கலாம். எத்தனையோ பேருக்கு கையில் பணம் இருந்தும் வாங்கிய கடனை அடைக்க முடியாது அதிலும் சில இடங்களில் வாங்கிய கடனை எப்போதும் அடைக்க முடியாமல் தொடரும். அப்படியான கடனிலிருந்து விடுபட இந்த பரிகார முறை சிறந்ததாக அமையும்.

இந்தப் பரிகாரத்திற்கு இரண்டு சிவப்பு நிற சிறிய துணியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு துணியிலும் 27 மிளகை வைத்து கருப்பு நிற நூலால் கட்டிக் கொள்ளுங்கள். அடுத்து இந்த மிளகை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு இரண்டு அகல் விளக்கு நல்லெண்ணெய் இவற்றை எடுத்துக்கொண்டு வாராகி அம்மன் ஆலயம் சென்று அவருக்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்க ஊர் கோவில்ல கொடியேற்றியாச்சா? அதன் முழு அர்த்தம் தெரியுமா?
Varahi Amman worship

தீபம் ஏற்றி எரியும்போது தீபத்திற்கு முன்பாக நின்று நீங்கள் யாரிடம் பணம் வாங்கினீர்கள்? எவ்வளவு தொகை கடனாக வாங்கினீர்கள்? என்பதைச் சொல்லி அவை விரைவில் அடையவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் வீட்டின் அருகில் வாராகி அம்மன் ஆலயம் இல்லையென்றால் பைரவருக்கு இந்த தீபத்தை ஏற்றலாம். இந்த வழிபாட்டை ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.

பண வரவு அதிகரிக்கவும், கடன் பிரச்னை தீரவும் இந்த வழிபாட்டு முறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் நிச்சயம் பெருகும். அதற்கு உங்களுடைய முயற்சியும் நம்பிக்கையும்தான் தேவை.

-பொ. பாலாஜி கணேஷ்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com