

வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் துடைப்பங்களை முறையற்ற வகையில் வைத்தால் எதிர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் ஈர்த்துவிடும். இதனால் ஆரோக்கியம் செல்வம் மற்றும் உறவுகள் போன்ற வாழ்க்கை நம் பல்வேறு அம்சங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுத்திவிடும்.
தென்மேற்கு திசையில் துடைப்பம் வைப்பது செழிப்பு மற்றும் நிதி பாதுகாப்பை குறிக்கிறது. ஆனால் வடகிழக்கு திசையில் மட்டும் துடைப்பம் வைக்கவே கூடாது.
துடைப்பத்தை தரையில் படுக்கப் போட்டு வைக்கக் கூடாது. இதனால் வீட்டின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும். எப்போதும் ஓரமாக சாய்த்து வைக்கவேண்டும்.
வாசல் கதவு அருகே துடைப்பம் வைத்தால் அதிர்ஷ்டம் மற்றும் நிதி வாய்ப்புகளை வெளியேற்றிவிடும்.
துடைப்பத்தை மறைவான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் கண்களில் தென்படும் வகையில் வைக்கத் கூடாது. இதனால் வாழ்க்கையில் நிறைய தடைகள் வரும்.
சமையலறை, பூஜை அறை, படுக்கை அறையில் அல்லது உணவுப்பொருட்கள் அருகே துடைப்பம் வைக்ககூடாது. இது பாசிட்டிவ் எனர்ஜியை பாதிக்கச்செய்யும்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு துடைப்பம் பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்வதை தவிர்க்கவேண்டும். இதனால் லட்சுமிதேவி வீட்டை விட்டு வெளியேறுவார் என கூறப்படுகிறது.
பழைய துடைப்பம் அல்லது உடைந்த துடைப்பத்தை உடனே மாற்ற வேண்டும். இதனால் தொழில் வளர்ச்சி தடைபடுவதோடு வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி குறையக்கூடும்.
வீட்டில் ஒரே இடத்தில் இரண்டு துடைப்பம் உரசும்படி வைக்கவே கூடாது. இதனால் குடும்ப உறுப்பினர்கள் இடையே தேவையற்ற வாக்குவாதம் சண்டைகள் வரக்கூடும்.
வீட்டை துடைப்பத்தால் பெருக்கும்போது முதலில் மேற்கு அல்லது வடக்கு திசையில் இருந்து பெருக்கத் தொடங்கவும். பெருக்கிய பின் குப்பைகளை சேர்த்து வைக்காமல் குப்பை தொட்டில் போடவேண்டும். (குப்பைகளை குவித்து வைத்தால் உங்களின் கஷ்டங்களும் அதிகரிக்கும்) அதனால் இதை செய்யாமல் இருந்தால் வீட்டில் லட்சுமி தங்குவதோடு லட்சுமியின் அருள் முழுமையாக கிடைக்கும்
தீபாவளி அன்று புது துடைப்பம் வாங்குவதால் லட்சுமி தேவி ஆசீர்வாதம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இது தவிர வியாழன், வெள்ளிக்கிழமைகளில் துடைப்பம் வாங்க கூடாது.
வீட்டை சுத்தம் செய்யும் நேரம் காலை, மாலை ஆகும். அந்தி பொழுதில் வீட்டை பெருக்கக்கூடாது.
அதனால் வேத ஜோதிடத்தில் துடைப்பம் லட்சுமி தேவியுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. இந்து மத நூல்களின்படி துடைப்பம் லட்சுமி தேவியின் சின்னம் என்று கூறப்படுகிறது. வாஸ்துவின் இந்த விதிகளை பின்பற்றினால் பல பிரச்னைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம்!