யாரும் அறியாத ஒலியும் ஒளியும்… மர்மங்கள் சூழ்ந்த வெள்ளியங்கிரி மலைத்தொடர்!

Mountain
Mountain

"தெற்கின் கைலாஷ்" என்றும் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைகள், மனநிம்மதியைத் தேடுபவர்கள், முனிவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் என்று அங்கு பயணம் மேற்கொள்ளும் அனைவரையும் ஒரே மனநிலையில் வைத்திருக்கும் மாய வசீகரம் கொண்ட ஒரு மலை தொடர் பற்பல இப்படிப்பட்ட அதிசயங்களை அடக்கி வைத்திருக்கும் இந்த மலைத்தொடர்ப் பற்றி தெரிந்து கொள்வோம்

1. புவியியல் மற்றும் இயற்கை அழகு

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைகள், கம்பீரமான மலைத்தொடராக அமைந்துள்ளன. 520 மீட்டர் முதல் 1840 மீட்டர் வரை உயரம் கொண்ட இந்த ஏழு மலைகளும், கிழக்கே பசுமையான சமவெளிகளாலும், மேற்கே கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தாலும், வடக்கே நீலகிரி மலைகளாலும், தெற்கே சிறுவாணி மலைகளாலும் சூழப்பட்டுள்ளன. வருடம் தோறும் இங்கு பொழியும் மழையின் அளவு அடிக்கடி மாறுபடும் (500 மிமீ முதல் 7000 மிமீ வரை), மற்றும் குளிர்காலத்திலும் சரி , கோடை காலத்திலும் இந்த இடத்தின் வெப்பநிலை மாறிக்கொண்டே இருக்கும். இந்த மலைகளில் இருந்து உருவாகி சிறுவாணி அணையில் கலக்கும் நொய்யல் ஆறு உட்பட, பருவகால ஆறுகள், கோயம்புத்தூர் நகர்ப்புற மக்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றன.

Velliangiri Hills
Velliangiri Hills

2. ஆன்மிக முக்கியத்துவம்

வெள்ளியங்கிரி மலைகள் ஒரு சக்திவாய்ந்த ஆன்மிக மையமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் தனது துணைவியான உமாதேவியின் வேண்டுகோளின்படி இங்கு தனது பிரபஞ்ச நடனத்தை (ஆனந்த தாண்டவத்தை) ஆடினார் என்று புராணம் கூறுகிறது. இதனால் இந்த மலையை சிவன் வசிக்கும் கைலாச மலைக்கு நிகரான ஒரு புனிதமான இடமாகக் கருதுகிறார்கள். குறிப்பாக, கச்சியப்பர் பேரூர் புராணத்தில், மகா விஷ்ணு சிவனின் தெய்வீக நடனத்தைக் காண முயன்றதாகவும், இதன் காரணமாக அவர் வெள்ளியங்கிரிக்கு வரவழைக்கப்பட்டதாகவும் இந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. தனித்துவம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலைத் வழிபாட்டு தளங்களிலிருந்து வேறுபட்டு, இந்த வெள்ளியங்கிரி சிவன் கோயிலுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது. சிவனின் பிரபஞ்ச நடனம் இங்குதான் வெளிப்பட்டதற்கு . சாட்சியாக அந்த நேரத்தில் உடைந்து எறியப்பட்ட கற்களின் மூலம் உருவாக்கப்பட்ட பாறைகளை நாம் அங்கு காண இயலும் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கடலுக்கு அடியில் ஒரு தனித்துவமான உலகம்… அப்படி என்ன அதிசயம் இருக்கு அங்கே?
Mountain

4. உச்சிக்கு மலையேற்றம்

அடர்ந்த காடுகளின் வழியாகச் செல்லும் பாதையில் நம்மால் மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகள், பழங்கால பாறை வடிவங்கள் மற்றும் பரந்த விரிந்த சில அரிய காட்சிகளை காண இயலும் . நீங்கள் மேலே ஏறும்போது, ​​காற்று மிருதுவாகி, யூகலிப்டஸின் வாசனை நிரம்பி உள்ளதால் இது உங்கள் நுரையீரலை தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது . இது போக மலையின் உச்சியில், 112 அடி உயர அதிசயமான ஆதியோகி சிவன் சிலையை நீங்கள் காணலாம். இந்த காட்சியானது, கண்டிப்பாக உங்கள் நினைவில் ஒரு மறக்க முடியாத அடையாளமாக நிலைத்திருக்கும்.

Velliangiri Hills
Velliangiri Hills

5. மர்மங்கள் சூழ்ந்த பயணம்

யோகிகளும் சித்தர்களும் பல நூற்றாண்டுகளாக தியானம் செய்த மர்மமான குகைகள் இந்த மலைகளில் மறைந்துள்ளன. இந்த குகைகள் எல்லாம் வெவ்வேறு பரிமாணங்களுக்கான நுழைவாயில்கள் என்று கருதப்படுகிறது. அங்கு கால வளைவுகள் மற்றும் பிரபஞ்ச ஆற்றல்கள் ஒன்றிணைக்க படுவதாக நம்பப்படுகிறது. அகஸ்திய முனிவர் பல வருடங்களுக்கு முன்பே இந்த இடத்திற்கு வந்ததாகவும், அவர் இப்போது வரை அங்கு வசித்துக் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது இதுபோக இந்த மலை தொடரை ஆராய்ச்சி செய்ய பயணம் மேற்கொள்பர்களுக்கு அவர் தன் சக்தியால் வழிகாட்டுவதாகும் சிலர் நம்புகிறார்கள். மேலும் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், ஒரு எண்ணெய் விளக்கின் மங்கலான ஒளியை சில குகைகளில் பார்க்கக்கூடும் என்றும்,பண்டைய மந்திரங்களை உச்சரிக்கும் மர்மமான எதிரொலிகளை கேட்கலாம் என்றும் இன்றளவும் நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com