

நாம் ஒவ்வொருவரும் மன அமைதிக்காகவும், நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறவும் கடவுளை வணங்குகிறோம். அவ்வாறு நம்முடைய வீட்டிலும் கோயிலிலும் வழிபடும்போது நம்மை அறியாமலேயே சில தவறுகளை செய்வதால் நாம் நினைத்து வழிபடக்கூடிய சில நல்ல காரியங்கள் தடைபடுகின்றன. அவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்காக தனியாக உள்ள இடத்தில் விளக்கேற்ற வேண்டும். மேலும், சிலைகளுக்கு அருகில் விளக்கேற்றாமலும், சுவாமியை தொடாமலும் வணங்க வேண்டும்.
2. கடவுளுக்கு பூஜை செய்த பொருட்களை பூஜை செய்யாதவற்றுடன் சேர்த்து விடக் கூடாது.
3. பஞ்சினால் செய்யப்பட்ட விளக்கு திரியை திங்கட்கிழமைகளில் எக்காரணத்தைக் கொண்டும் கையால் தொடக் கூடாது.
4. எந்த ஒரு ஆலயத்திற்கு செல்லும்போதும் வீட்டில் கோலம் போடாமலும், விளக்கேற்றாமலும் செல்லக் கூடாது.
5. விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்போது அதில் உள்ள எண்ணெய் மற்றும் நெய்யை கையால் தொட்டு விடக் கூடாது. மேலும், கையில் இருக்கும் எண்ணையை எக்காரணம் கொண்டும் தலையில் தடவக் கூடாது.
6. சுவாமி படங்களில் இருக்கும் முதல் நாள் போட்ட காய்ந்த பூக்களை உடனடியாக அகற்றி விட வேண்டும்.
7. பெருமாள் கோயிலுக்கு சென்று வீடு திரும்பும்போது மகாலட்சுமி தாயாரும் நம்முடன் வீட்டுக்கு வருவாள் என்பது ஐதீகமாக உள்ளதால் மகாவிஷ்ணு கோயிலில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்னர் அங்கே அமரக் கூடாது.
8. வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளேயோ அல்லது நேர் எதிரேயோ ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும்.
9. மேலும், ஸ்வஸ்திக் ,ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூல சின்னங்களை வெளியே செல்லும்போது சட்டைப் பையில் எடுத்து செல்வதன் மூலம் செல்லும் காரியம் வெற்றியோடு முடியும்.
10. சிரிக்கும் புத்தர் சிலையை வாசலுக்கு நேர் எதிரிலோ அல்லது வாசலை பார்த்தோ வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம், வெற்றி, தன லாபம் போன்றவை அதிகரிக்கும்.
11. மேலும், அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும். பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் பரிகாரம் செய்யும் நேரத்தில் வீட்டில் உறங்கக் கூடாது.
12. யாராவது பிரசாதத்தை பூஜை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் கொடுத்தால் அதை வாங்கிக் கொண்டு பூஜை முடிந்த பின்புதான் உண்ண வேண்டும்.
கடவுளை வணங்கும்போது மேற்கூறியவற்றை மனதில் வைத்து கடைபிடிக்க, உங்களுக்கு பலன் இரட்டிப்பாகக் கிடைக்கும்.