தசாங்கம் புகை போடுவது ஏன் முக்கியம்? உங்கள் தலைமுறை கஷ்டத்தையே போக்கும் சக்தி இதற்கு உண்டு!

Dasangam incense
Dasangam
Published on

சில வீடுகளில் எவ்வளவுதான் விளக்கு எரிந்து கொண்டிருந்தாலும், வீட்டில் ஏதோ ஒரு இருள் சூழ்ந்த நிலை இருக்கும்‌. வீட்டில் ஏதோ ஒன்று உங்களை ஆட்டிப்படைப்பது போல் இருக்கும்.‌ கஷ்டம் இருப்பதை நாம் கண்டுபிடிச்சிட்டோம்.‌ நம்மை அறியாமலேயே நம் உணர்வுகள், கஷ்டங்களை காட்டிக்கொடுக்கும்.‌ உதாரணமாக, வீட்டில் கறுகிய வாடை அடிக்கும், தீய்ந்து போன வாடை, பிளாஸ்டிக் எரிவது போன்று, ஒயர் எரிவது போன்று, முடி கருதுவது போன்ற வாடை வீசும். அக்கம் பக்கம் இந்த வாசம் வீசுவதற்கு எந்த அறிகுறியும் இராது. இப்படிப்பட்ட வாசனை உங்கள் வீட்டில் அடிக்கடி வீசினால் உங்கள் வீட்டில் தெய்வசக்தி நடமாட்டம் இல்லை என்று அர்த்தம்.

சில வீடுகளில் கெட்ட வார்த்தைகள் பேசிக்கொண்டு, அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள்.‌ அப்படிப்பட்ட வீட்டிலும் தெய்வ நடமாட்டம் இல்லை என்றுதான் அர்த்தம். தினமும் விளக்கு ஏற்றி வைத்தால் மட்டும் போதாது. உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறதா என்று அடிக்கடி கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும்.‌

தசாங்கம் வாங்க...

வீட்டில் கெட்ட வாடை வந்தாலோ, அடிக்கடி சச்சரவு ஏற்பட்டாலோ அதை சரிசெய்ய எளிமையான பரிகாரம் இருக்கிறது. வீட்டில் தெய்வ நடமாட்டத்தைக் கொண்டுவர முதலில் உங்கள் வீட்டில் ஒட்டடை அடித்து  நன்கு சுத்தம் செய்யுங்கள். வீடு முழுவதும் கல் உப்பு சேர்த்து தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள். ‌வீட்டில் இருந்து நிலை வாசல் வரை வீட்டை சுத்தம் செய்யுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் கல் உப்பு, இந்து உப்பு, கருப்பு உப்பு மூன்றையும் அதில் சேர்த்து அந்த நீரை வீடு முழுவதும் மற்றும் நிலைவாசல் வரை தெளிக்க வேண்டும்.

பிறகு கோமியத்தை வாங்கி மாவிலையால் வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். பூஜையறையிலும் தெளிக்கலாம். பிறகு மணக்க மணக்க தசாங்கம் ஏற்றப்பட வேண்டும்.‌ தசாங்கம் வாசனை மட்டும் கொடுக்கக் கூடியது அல்ல, வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை  மற்றும் எதிர்மறை ஆற்றலை விரட்டிக் கூடியதாகும். நீங்கள் தினமும் ஊதுபத்தி ஏற்றி வழிபட்டாலும் வாரத்தில் ஒருநாள் தசாங்கம் புகையைப் காண்பியுங்கள்.

இது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அழித்துவிடும். பிறகு பூஜை அறையில் விளக்கேற்றி குலதெய்வத்தின் பெயரை 27 முறை சொல்ல, வீட்டில் இருக்கும் துர்சக்திகள் விலகும்.‌ வீட்டில் நேர்மறையான விஷயங்கள் தொடர்ந்து நடக்க ஆரம்பிக்கும்.‌

இதையும் படியுங்கள்:
சுவாமி ஐயப்பனின் தசாவதாரக் கோலங்கள்!
Dasangam incense
இதையும் படியுங்கள்:
மற்றவர் காலில் விழுவது புண்ணியத்திற்கு பதில் பாவத்தை ஏற்படுத்துமா?
Dasangam incense

மனதார இந்தப் பரிகாரத்தைச் செய்து கற்பூர ஆரத்தி காண்பித்து பரிகாரத்தை நிறைவு செய்யுங்கள்‌. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகள் இந்த பரிகாரம் செய்து வர, வீடு நல்ல சுபிட்சத்தோடு இருக்கும்‌. வீட்டில் தெய்வ சக்தி நிறையும். நம்பிக்கையோடு இந்தப் பரிகாரம் செய்ய உங்கள் வீட்டில் இறை பக்தி நிரம்புவதை கண்கூடாக அனுபவிப்பீர்கள்.

அதோடு, இதையும் சேர்த்து செய்யலாம். வீட்டின் தென்மேற்கு திசையில் விளக்கு ஏற்றி வர நேர்மறை ஆற்றல்கள் பெருகும். உங்கள் வீட்டின் ஜன்னல் பகுதியில் ஒரு கிண்ணத்தில் தானியம் வைக்க, அதை சாப்பிட குருவிகள், அணில் மற்றும் புறா போன்ற பறவைகளின் வருகையால் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி மேம்படும்.‌‌ அவற்றின் வருகை நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.

தினமும் மந்திரங்களை உச்சரிப்பதால் ஏற்படும் நல்ல அதிர்வுகள் வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்கச் செய்யும். தினமும் மணி அடித்து பூஜை செய்ய, கெட்ட சக்திகள் விரட்டப்பட்டு தெய்வ சக்தி குடியேறும். உங்கள் குலதெய்வ வழிபாடு தெய்வ சக்தியை மேம்படுத்தும்‌.

தசாங்கம் வாங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com