அரசியல் தடைகளைத் தகர்க்க விஜய் பயன்படுத்தும் 'அரகஜா'! இதன் ஆன்மீக மகிமைகளைக் கேட்டால் வியந்து போவீர்கள்!

அரசியல் தடைகளை உடைத்தெறிய விஜய்க்கு துணைநிற்கும் அரகஜா திலகம்; எதிரி தொல்லை, பொறாமை, காரியத் தடைகள் நீங்கி வெற்றி தரும் ஆன்மீக சக்தி என பக்தர்கள் நம்பிக்கை.
vijay-aragaja-spiritual-beliefs
vijay-aragaja-spiritual-beliefs
நான்சி மலர்

வணக்கம். என் பெயர் நான்சி மலர். என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதற்கு நன்றி. நான் B.E. Computer science Engineering முடித்துள்ளேன். எனக்கு சிறுவயது முதலே எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. ‘எழுத்துக்கள் மூலம் நம் எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்த முடியும்’ என்று நம்புகிறேன். கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் அனுபவம் உண்டு. Content writing துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. மோட்டிவேஷன், பயணம், ஆரோக்கியம், ஃபேஷன், ஆன்மீகம் போன்ற கட்டுரை எழுதுவதில் ஆர்வம் அதிகம். என்னுடைய எழுத்து வாசகர்களாகிய உங்களை கவர்ந்தால், அது எனக்கு மகிழ்ச்சியே! ‘ இன்னும் எதிர்காலத்தில் உங்கள் மனதில் என் எழுத்துக்கள் மூலம் இடம் பிடிப்பேன்’ என்று முழுமையாக நம்புகிறேன்.

Updated on

விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்து எண்ணற்ற இடையூறுகளைச் சந்தித்து வருகிறார்; இருப்பினும், போராடி முதலமைச்சர் அரியணையில் ஏறினார். அவர் பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தாலும், அனைத்து மதங்களையும் மதிப்பவராக இருக்கிறார்.

இப்படி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளவராக இருக்கும் விஜய், சமீபகாலமாக எங்கு சென்றாலும் நெற்றியில் கருப்பு திலகமிட்டுக் (vijay-aragaja-spiritual-beliefs) கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த கருப்பு திலகத்தை 'அரகஜா' என்று கூறுவார்கள். இது, தென்னிந்திய கோவில்களில் உள்ள வழிப்பாட்டு முறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

அரகஜா, எட்டு வகை புனித வாசனைத் திரவியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது; இதனை 'அஷ்டகந்தம்' என்றும் கூறுவார்கள். அரகஜா என்பது கருப்பு குங்குமம், சந்தனம், தாமரை வித்து, பச்சை கற்பூரம் மற்றும் இன்னும் சில மூலிகை பிசின்களை வைத்துத் தயாரிக்கப்படுகிறது.

அரகஜாவைப் பயன்படுத்துவதால் எதிரி தொல்லை ஒழியும்; போட்டி, பொறாமை மற்றும் காரிய தடைகள் நீங்கும்; வீட்டில் சுபிக்ஷம் பெருகும்; குலதெய்வத்தின் பரிபூரண அருள் முழுமையாகக் கிடைக்கும். மேலும், அரகஜாவை வைத்துக் கொள்வதால் கண் திருஷ்டி நீங்கும் என்றும், இதற்கு வசியத் தன்மை உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

இது, நேர்மறை ஆற்றலை ஈர்த்து வந்து சேர்க்கும்; நெற்றியில் பூசிக்கொள்ளும் போது மனதை ஒருநிலைப்படுத்தி, மன அமைதியைக் கொடுக்கும். முக்கியமான காரியங்களுக்குச் செல்லும் போதோ அல்லது தொழில் நிமித்தமாக வெளியில் செல்லும் போதோ இதனை நெற்றியில் வைத்தால், காரியத் தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.

அரகஜா மிகவும் அடர்த்தியான கருப்பு நிறத்தைக் கொண்டது; எனவே, இதனை நெற்றியில் சிறிதாக வைப்பதே போதுமானது. இதனைத் தினமும் காலையில் குளித்து முடித்து வழிபாட்டிற்குப் பின் அல்லது முக்கியமான சுப காரியங்களுக்கு வெளியில் செல்லும் போது வைத்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: குலதெய்வ ரகசியம்: ஊர்க்கோடி அம்மன்!
vijay-aragaja-spiritual-beliefs

இதுமட்டுமில்லாமல், தற்போது விஜய் அவர்கள் கையில் சிகப்பு நிறக் கயிறு கட்டியிருப்பதையும் மக்கள் கவனிக்கத் தவறவில்லை. அவர்களின் இந்த ஆன்மீக நம்பிக்கை, தற்போது மக்களிடையே பெரும் பேசும்பொருளாக மாறியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com