தொட்டதெல்லாம் துலங்க விஜயதசமி! உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக ரகசியங்கள்!

தொழில், கல்வி மற்றும் புதிய முயற்சிகளில் மகத்தான வெற்றி பெற விஜயதசமி நாளில் செய்ய வேண்டியவை.
விஜயதசமி வழிபாட்டு - Vijayadashami worship
விஜயதசமி வழிபாட்டு - Vijayadashami worship

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

விஜயதசமி விசேஷ தகவல்கள்:

பெயர் விளக்கம்: 'விஜய்' என்றால் வெற்றி என்றும், 'தசம்' என்றால் பத்து என்றும் பொருளாகும்.

தீமை அழிவு: அன்னை துர்கை மகிஷாசுரனை வதம் செய்து தர்மத்தைக் காத்த நாளாகவும், ராமன் ராவணனை வென்ற நாளாகவும் இது போற்றப்படுகிறது. இந்நாளில் விஜயதசமி வழிபாட்டு தொடங்கப்படும் எந்தவொரு புதிய காரியமும் தடையின்றி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 

* குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவிலில் பராசக்தி பீடம் உள்ளது. இங்கு நவராத்திரி விஜயதசமியன்று, முரசு, மத்தளம், சங்கநாதம் முழங்க, சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் கலந்து கொள்பவர்கள், எதிலும் வெற்றி வாய்ப்பு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

* தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் நவராத்திரி விழா விஜயதசமி அன்று கடற்கரையில் நடைபெறும் மகிஷாசுர வதம் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றது. 

* மகிஷாசுரனுடன் போரிட்டு அன்னை சாமுண்டீஸ்வரி அவனை வதம் செய்த நாளே விஜயதசமி என்று தேவி மகாத்மியம் கூறுகிறது.

* அரசர்கள் காலத்தில் விஜயதசமி அன்று சிம்மாசனம், வெண்கொற்றக் குடை, படைக் கலன்கள் ஆகியவற்றிற்கு பூஜை நடத்துவது வழக்கம்.

 * பாண்டவர்கள் வன்னி மரத்தில் வைத்திருந்த ஆயுதங்களை விஜயதசமியன்று எடுத்துச் சென்று போரிட்டு, மகாபாரத போரில் வெற்றி பெற்றனர்.

* வட இந்தியாவில் சில இடங்களில், ராமன், ராவணனை வதம் செய்த நாளாக விஜயதசமியை, ராமலீலா என்னும் பெயரில் விழாவாக நடத்துகின்றனர்.

* வாயு பகவான் த்ரேதா யுகத்தில் ஸ்ரீராம சேவைக்காக அனுமனாகவும், துவாபர யுகத்தில் கிருஷ்ணர் சேவைக்காக பீம சேனராகவும், கலியுகத்தில் வேத வியாசர் சேவைக்காக மத்துவாச்சாரியாராகவும் அவதாரம் செய்த தினம் விஜயதசமி ஆகும்.

விஜயதசமி வழிபாட்டு - Vijayadashami worship
விஜயதசமி வழிபாட்டு - Vijayadashami worshipImage credit:: Gemini

* கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் கதவு விஜயதசமி, கார்த்திகை விழா ஆகிய தினங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது. 

* கூத்தனூர் சரஸ்வதி தேவி கோவிலில் விஜயதசமியன்று கலைஞர்கள் தங்கள் கலைத்திறமையை தேவிக்கு அர்ப்பணம் செய்கின்றனர்.

* மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அர்த்த மேருவுக்கு சந்தனம், புனுகு சாற்றி குங்குமம் இட்டு, பூஜிக்கின்றனர். விஜயதசமியன்று எட்டுவித மூலிகைகளால் ஆன அஷ்ட கந்தமும், அதன் மேல் தங்கக் கவசமும் சாற்றப்படுகின்றன.

* ராமன், ராவணனுடன் போரிட விஜயதசமியே உகந்த நாள் என்று கருதி, அன்று புறப்பட்டதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

* சத்ரபதி சிவாஜி மன்னர், விஜயதசமி அன்றுதான் இந்து தர்மத்தைக் காக்க, அன்னை பவானி அம்மன் முன்னிலையில் உறுதி எடுத்துக் கொண்டார் என்கிறது வரலாறு.

இதையும் படியுங்கள்:
சிவன் கோவிலில் இந்த ஒரு தப்பை செய்யாதீங்க... ஜாக்கிரதை!
விஜயதசமி வழிபாட்டு - Vijayadashami worship

* விஜயதசமியன்று வன்னி மரத்தை வழிபடுவது சிறப்பு. பெருமாள் கோவில்களில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னி மரத்தை சுற்றி வருவது வழக்கம்.

* அக்ஷராப்யாஷம் என்ற குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியை ஆரம்பிப்பது விஜயதசமி அன்றுதான்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் விஜயதசமி நன்னாளின் தனித்துவமான பண்பாட்டு மற்றும் ஆன்மீக சிறப்புகளை அறிந்து, பண்டிகையை முழுமையான ஆன்மீக உணர்வோடு கொண்டாடும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com