தவறில்லாமல் விளக்கேற்றும் முறைகள் மூலம் அஷ்டலட்சுமிகளின் பரிபூரண அருளைப்பெறுவது எப்படி?

லட்சுமி கடாட்சம் பெருகவும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கவும் விளக்கேற்றும் முறைகள்.
விளக்கேற்றும் முறைகள் - Pooja deepam tips
விளக்கேற்றும் முறைகள் - Pooja deepam tips
பிருந்தா நடராஜன்

பிருந்தா நடராஜன், 1987-88-ல் ஆனந்த விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வாகிப் பணியாற்றியவர். கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் என்று பல பிரிவுகளிலும் திறம்பட எழுதும் ஆற்றல் பெற்றவர்.கடந்த சில ஆண்டுகளாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

இந்து சாஸ்திரங்களின்படி, ஆன்மீகத்திலும் வழிபாட்டிலும் தீபத்திற்கு மிக முக்கியமான இடமுண்டு. விளக்கேற்றுவது என்பது வெறும் இருளைப் போக்குவது மட்டுமல்ல; அது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, மகாலட்சுமியின் அருளையும் நேர்மறை எண்ணங்களையும் கொண்டு சேர்க்கும் ஒரு தெய்வீகச் செயலாகும்.

ஆனால், விளக்கேற்றும்போது அறியாமல் செய்யும் சில சிறிய தவறுகள், வீட்டில் பெரிய கஷ்டங்களை உருவாக்க வாய்ப்பாகும். எனவே, தீபமேற்றும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

விளக்கேற்றும் முறைகள்:

விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள்:

வாசல் கதவுகள்:

விளக்கு ஏற்றும்போது வீட்டின் முன் வாசலைத் திறந்து வைக்கவேண்டும். இதன் மூலம் லட்சுமி தேவி வீட்டிற்குள் வருகிறாள் என்பது நம்பிக்கை. அதே நேரத்தில், பின்பக்க வாசலை மூடி வைக்கவேண்டும்.

திரியிடும் முறை:

விளக்கில் முதலில் நெய் அல்லது எண்ணெயை ஊற்றிய பின்பு தான் திரியைப் போடவேண்டும். வெறும் விளக்கில் திரியை வைத்துவிட்டு எண்ணெய் ஊற்றுவது சாஸ்திரப்படி சரியானதல்ல.

வீடு கூட்டும் நேரம்:

வீட்டில் விளக்கேற்றி, அந்த தீபம் நன்கு குளிரும் வரை (அணையும் வரை) வீட்டைப் பெருக்கவோ, பெருக்கித் துடைக்கவோ கூடாது. மேலும், ஏற்றிய விளக்கை அந்த நேரத்தில் துடைக்கவும் கூடாது.

மனநிலை:

விளக்கேற்றும் மங்களகரமான நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் யாரும் அழக்கூடாது. சண்டை சச்சரவுகள் இன்றி மன அமைதியுடன் இறைவனை வழிபட வேண்டும்.

கூடுதல் ஆன்மீகக் குறிப்புகள்:

தீபத்திற்கு நல்லெண்ணெய் அல்லது பசு நெய் பயன்படுத்துவது சிறந்தது. பருத்தித் திரி அல்லது தாமரைத் தண்டுத் திரி பயன்படுத்தி விளக்கேற்றினால் குடும்பத்தில் அமைதியும் செல்வமும் பெருகும். கிழக்கு நோக்கி விளக்கேற்றுவது துன்பங்களை நீக்கும்; வடக்கு நோக்கி ஏற்றுவது திருமணத்தடை மற்றும் கடன் தொல்லைகளைத் தீர்க்கும். மாலை நேர சந்தி வேளையில் (பிரதோஷ காலம்) தீபமேற்றி வழிபட, வீட்டில் அமைதியும் குடும்பத்தில் ஒற்றுமையும் எப்போதும் நிலவும்.

தீபம் ஏற்றும்போது சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த ஸ்லோகம்:

விளக்கேற்றும்போது சும்மா உட்கார்ந்து விளக்கேற்றாமல் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி விளக்கேற்றினால் அஷ்ட லஷ்மிகளின் அருளும் பூரணமாக கிடைக்கும். " தீபஜ்யோதி பரம்பிரம்ம தீபஜ்யோதி ஜனார்த்தன தீபோ ஹரஸுமே பாபம் தீபஜ்யோதி நமோஸ்துதே" " கீடபதங்கா மஷகாச்ச வ்ருஷா; ஜலே ஸ்தலயே நிவஸந்தி ஜீவா: த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜோ..பவந்தி நித்யம் ஸ்வபசா ஹி விப்ரா:

விளக்கேற்றும் முறைகள் - Pooja deepam tips
விளக்கேற்றும் முறைகள் - Pooja deepam tipsImage credit: Gemini

இந்த ஸ்லோகத்தின பொருள்;

தீபத்தின் ஒளி பரப்பிரம்மத்தின் வடிவம். அது மனிதர்களின் பாவங்களையும் அறியாமையையும் போக்க வல்லது.. இந்த தீபத்தின் ஒளியைக் காணும் அனைத்து உயிரினங்களுக்கும் மறுபிறப்பற்ற முக்தி கிடைக்கும் என்பது இதன் ஆன்மிகப் பொருளாகும்.

தீம் வழிபாட்டின் கூடுதல் ஆன்மிக ரகசியங்கள்;

தீபத்தின் முகங்கள் தரும் பலன்கள்:

ஒரு முகம் ( ஒரு திரி) நினைத்த காரியங்கள் தடைகள் இன்றி நிறைவேறும்.

இரண்டு முகங்கள்;

குடும்பத்தில் ஒற்றுமையும் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்..

மூன்று முகங்கள்:

புத்திர பாக்கியம் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்..

நான்கு முகங்கள்:

பசுக்கள், நிலம் உள்ளிட்ட சகல செல்வங்களும் பெருக்கம் அடையும்.

ஐந்து முகங்கள் ( நில விளக்கு/ காமாட்சி விளக்கு)

ஐஸ்வர்யமும் அஷ்டலஷ்மி கடாட்சமும் இல்லத்தில் என்றும் நிலைத்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
செல்வம் கொழிக்க துளசி பூஜை… 100 சதவீதம் பலன் தரும் குறிப்புகள்!
விளக்கேற்றும் முறைகள் - Pooja deepam tips

விளக்கின் அடியில் வைக்க வேண்டியவை:

விளக்கை எப்போதும் வெறும் தரையில் வைக்க கூடாது ‌‌.. அதற்கு பதிலாக சிறிய தாம்பூலத்தட்டு ,பித்தளைத்தட்டு அல்லது மணையின் மீது வைக்கவேண்டும். தட்டின் மேல் சிறிதளவு பச்சரிசி அல்லது பூக்களைப் பரப்பி அதன் மீது விளக்கை வைத்து ஏற்றுவது அதிர்ஷ்டத்தையும் லட்சுமி கடாட்சத்தையும் வாரி வழங்கும் ‌‌எண்ணெய் கடைசி சொட்டு தீரும் வரை விளக்கை எரிய விடக்கூடாது. ஒரு துளி பால் அல்லது பூவால் விளக்கை குளிர வைக்க வேண்டும்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் மஹாலக்ஷ்மி கடாட்சம் பெருக மாலை வேளையில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் அல்லது மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணம் செய்வது மங்களகரமான பலன்களைத் தரும். சங்கடசதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அகல் விளக்கில் தீபம் ஏற்றி அருகம்புல் சாற்றி வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் சந்திக்கும் தடைகள், கடன்கள் மற்றும் காரியத் தாமதங்கள் அனைத்தும் விலகி வெற்றி உண்டாகும்.

பிரதோஷ காலத்தில் ( மாலை 4.30 முதல் 6..00 மணிவரை) வீட்டின் பூஜை அறையிலும் வாசல் படியின் இருபுறமும் தீபம் ஏற்றி சிவபெருமானையும் நந்தியெம் பெருமானையும் தியானிப்பது நமது பாவங்களைப் போக்கி மன அமைதியையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுக்கும்.

சுடர் அசையும் விதம்:

விளக்கு சுடர் சுழன்று அசையாமல் நேராக எரியும் போது வீட்டில் தெய்வீக அதிர்வுகள் ( positive vibrations) உச்சத்தில் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் வெள்ளி யானை... இத வெச்சா என்ன நடக்கும் பாருங்க!
விளக்கேற்றும் முறைகள் - Pooja deepam tips

அறிவியல் பார்வை;

இயற்கை எண்ணெய்களும் திரி எரியும்போது வெளியாகும் புகையும் காற்றில் உள்ள நுண்கிருமிகளை அழித்து மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை உடையது.

சிறப்பு வழிபாட்டு நாட்களில் ஏற்றப்படும் இந்த தீப ஒளி வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை முழுமையாக அகற்றி தெய்வீக சக்தியையும் சகல ஐஸ்வர்யங்களையும் நிறைவாக ஈர்த்துத் தரும்.

நமது முன்னோர்கள் கூறிய ஆன்மீக நெறிமுறைகளைப் பின்பற்றி, வீட்டில் விளக்கேற்றும் போது இந்தச் சிறிய தவறுகளைத் தவிர்த்தால், அஷ்டலட்சுமியின் அருளும் பூரண கடாட்சமும் நம் இல்லத்தில் நிலைத்திருக்கும். இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம் முறையான வழிபாட்டின் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் வறுமையற்ற சுபிட்சத்தையும் எப்படி எளிதாகப் பெறலாம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
செல்வம் கொழிக்க துளசி பூஜை… 100 சதவீதம் பலன் தரும் குறிப்புகள்!
விளக்கேற்றும் முறைகள் - Pooja deepam tips