துறவறத்துக்கு அனுமதி கேட்டு தாயிடம் கத்தியோடு சென்ற விவேகானந்தர்!

விவேகானந்தர்
விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் சன்னியாசம் மேற்கொள்ள விருப்பம் கொண்டார். அதற்காக தனது தாயிடம் சென்று அனுமதி கேட்டார். அதற்கு அந்தத் தாய், “மகனே! அப்படியானால் நாளை ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு என்னை வந்து பார்" என்றார்.

தாயின் சொற்படி விவேகானந்தரும் ஒரு கத்தியோடு மறுதினம் வந்தார். ஆனால், அவர் தாய் ஒன்றும் கூறவில்லை. மவுனமாக இருந்தார்.

விவேகானந்தர் தனது தாயிடம், "தாங்கள் கூறியபடி கத்தியோடு வந்துள்ளேன். தாங்கள் ஒன்றும் கூறாமல் மவுனம் சோதிக்கிறீர்களே" என வினவினார். ஆனால் அவரது தாய் தனது மகனிடம், "நாளையும் கத்தியோடு வா"என்றார். அன்றும் தாயின் அனுமதி அவருக்குக் கிடைக்கவில்லை.

இதேபோல், மாதக் கணக்கில் நடந்து வந்தது. ஆனாலும், அனுமதி கிடைக்கவில்லை. இதனால் விவேகானந்தர் வருத்தமுற்றார். இருப்பினும் தாயின் கட்டளைப்படி தினந்தோறும் கத்தியோடு தாயின் முன் சென்றுகொண்டிருந்தார்.

ஒரு நாள் ஆச்சரியமாக, அன்று அந்தத் தாய், மகன் விவேகானந்தரை துறவறம் எடுத்துக்கொள்ளும்படி அருள்புரிந்தார்.

அதைக்கேட்டு வியப்படைந்த விவேகானந்தர், "தாயே! மாதக்கணக்கில் தாங்கள் மவுனம் சாதித்து விட்டு, இன்று அனுமதி கொடுத்தீர்களே! அதன் காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா" என்று கேட்டார்.

உடனே அந்தத் தாய், "மகனே! நேற்று வரை நீ கொண்டு வந்த கத்தியின் கூர்மையான பாகத்தை என்னை நோக்கியும், பாதுகாப்பான அடி பாகத்தை உனது பக்கமாகவும் வைத்திருந்தாய். இன்றுதான் கூர்மையான பாகத்தை உனது பக்கமாகவும், ஆபத்தில்லாத அடி பாகத்தை என்னை நோக்கியும் கொண்டு வந்தாய்.

இதையும் படியுங்கள்:
வெள்ள அபாய எச்சரிக்கையை உணர்த்திய சங்கு கல் மண்டபங்களின் அதிசயம்!
விவேகானந்தர்

அதாவது, ஆபத்து  விளைவிக்கக்கூடிய பாகத்தை உன்னை நோக்கியும் ஆபத்தில்லாத அடி பாகத்தை என்னை நோக்கியும் கொண்டு வந்தாய். ஆபத்து விளைவிக்கக்கூடிய பாகத்தை உன்னை நோக்கி வைத்துக் கொண்டிருந்தது உன் தியாக மனப்பாங்கை காண்பிக்கிறது.

துறவறம் என்பது பிறருக்கு பாதுகாப்பாக அமைய வேண்டும். ஆகவே, உன்னை நம்பி வருபவர்களுக்கு ஆபத்து உண்டாகாது என்பது உறுதி. தியாக மனப்பாங்கை கொண்ட ஒருவர்தான் துறவறம் பூண முடியும். அந்தப் பக்குவம் உனக்கு வந்து விட்டது. இனி, நீ துறவறம் மேற்கொள்ளலாம். எனது ஆசிகள்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com