
1. முதுகை காட்டக் கூடாது
சனியை வழிபடும் போது மெதுவாக நகர்ந்து கொண்டேதான் வழிபட வேண்டும். ஒரே இடத்தில் வெகுநேரம் நின்று வழிபடக் கூடாது. அதே போல் சனிபகவானை வணங்கிவிட்டு வரும்போது முதுகை காட்டிக் கொண்டு வரக்கூடாது. அது அவரை அவமதிக்கும் செயலாகும். அதனால் சில அடிகள் பின்னால் வந்து அதற்குப் பிறகுதான் திரும்ப வேண்டும். இந்த எளிமையான நடவடிக்கை சனிபகவானின் கருணையைப் பெற்றுத்தரும்.
2. எண்ணெய் கொடுக்கும் முறை
சனிபகவான் கோவிலுக்கு எண்ணெய் வாங்கிக் கொடுக்கும் போது இரும்புப் பாத்திரத்தில் வைத்துதான் கொடுக்க வேண்டும். செம்பு போன்ற மற்ற உலோகங்கள் மற்றும் பாக்கெட்டுகளில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். செம்பு சூரிய பகவானுக்குரியதாகும். சனியும் சூரியனும் எதிரெதிர் கிரகங்கள். அதனால் செம்பு பாத்திரத்தில் எண்ணை கொடுத்தால் அது சனியை அவமதிப்பதாகும்.
3. நேருக்கு நேராக வழிபடக் கூடாது
சனி பகவானை வழிபடும் போது நேருக்கு நேர் நின்று வழிபடக் கூடாது. அதைப்போல் சனிபகவானை விழுந்து கும்பிட்டு வணங்கக் கூடாது. சனிபகவானுக்குப் பக்கவாட்டில் நின்று கண்களை மூடி அவரது பாதத்தை நினைத்துதான் வணங்க வேண்டும். சனிபகவானின் பார்வை நேரடியாக நம் மீது படும் வகையில் நின்று வழிபட்டால் கஷ்டங்களும், தீய விஷயங்களும் தான் நடக்கும்.
4. சனி பகவானுக்கு பிடிக்காத நிறம்
சிவப்பு நிற ஆடைகளை அணிந்து சனி பகவானை வழிபடக் கூடாது. இது அவரது கோபத்தை அதிகரிக்கச் செய்யும். மாறாக சனி பகவானுக்குப் பிடித்த கருப்பு மற்றும் நீல நிற ஆடைகளை அணிந்து வழிபடுவது சனியின் அருளைப் பெற்றுத்தரும்.
5. நிற்கக் கூடாத திசைகள்
பொதுவாக வழிபாட்டின் போது கிழக்கு நோக்கி நின்றுதான் வழிபடுவார்கள். ஆனால் சனி பகவான் மேற்கு திசைக்கு உரியவர் ஆவார். அதனால் அவரை மேற்கு நோக்கி நின்றுதான் வழிபட வேண்டும். மேற்கு திசையில் நின்று வழிபட்டால் சனி பகவான் அருள் கிடைக்கும். சனி பகவானை வழிபடுவதற்கு ஏற்ற திசையாக மேற்கு திசையே கருதப்படுகிறது.