7 நாட்கள் 7 நிறங்கள்; எந்த நாள் எந்த நிறம்?

Colours
Colours
Published on

ஞாயிற்றுக் கிழமை:

வாரத்தின் முதன் நாளாக ஞாயிறு உள்ளது. ஞாயிறு என்றால் சூரியன் என்று அர்த்தம். இந்த நாள் முழுக்க சூரியனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். அதனால் சூரியனின் நிறமான தன்னம்பிக்கையை அளிக்கும் செம்மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிவது அவரது அருளை பெற்றுத் தரும். சூரியன் வெற்றியையும் ஆதிக்கத்தையும் தரும் கடவுள் ஆவார்.

திங்கள் கிழமை:

திங்கள் என்பது சந்திர பகவானின் தமிழ் பெயர். திங்கள் அலுவலக முறைப்படி வாரத்தின் முதல் வேலை நாளாக இருக்கிறது. அன்றைய நாளில் சந்திரனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். அன்று சந்திரனின் ஆசியை பெறுவது அவசியம். சந்திரனின் மணம் குளிர வெண்ணிற ஆடை அணிய வேண்டும். வெள்ளை உடை அணிவதால் வேலை நாளில் பரபரப்புகள் குறைந்து மன அமைதி கிடைக்கும். சந்திரன் மனம் மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய கடவுள் என்பதால் நல்ல உணர்வினை தருவார்.

செவ்வாய்க் கிழமை:

செவ்வாய் கிழமை செவ்வாய் கடவுளின் தினமாகும். செவ்வாயின் அதிபதியான அங்காரகன் மற்றும் முருகனை வழிபட உகந்த நாளாகவும் உள்ளது. செவ்வாய் அன்று அங்காரகனுக்கு பிடித்த சிவப்பு வண்ண உடை அணியலாம். இந்நாளில் சிவப்பு நிற ஆடைகள் அவர்களுக்கு உறுதியான மனநிலை ஏற்படும். சிவப்பு வண்ணம் ஒருவருக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கைையும் அளிக்கிறது. சிவப்பு உடை அணிவதால் அந்த நாளில் ஏற்படும் தடைகளை உடைக்கும்.

இதையும் படியுங்கள்:
சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்போர் இத முதலில் தெரிஞ்சுக்கோங்க!
Colours

புதன் கிழமை:

நல் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் புதன் கடவுளின் நாள். எந்த விஷயத்தையும் தொடங்க புதன் கிழமை நல்ல நாளாக உள்ளது. அதனால்தான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்றார்கள். புதன் கடவுளுக்கு விருப்பமானது பச்சை நிறம். அந்த நிறத்தில் உடையணிவதால் அவரது ஆசியை எளிதில் பெறலாம். புதனின் ஆசி கிடைத்தால் மட்டுமே ஒருவரால் தொழிலில் வெற்றி பெற முடியும். பணம், வியாபாரம், அறிவு, அதிர்ஷ்டம், தந்திரம் ஆகியவற்றிருக்கும் அதிபதி புதன் தான். பச்சை நிறம் எப்போதும் மன அமைதியையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.

வியாழக்கிழமை:

வியாழன் என்று தேவகுரு பிரகஸ்பதி அழைக்கப்படுகிறார். குரு ஆதிக்கம் மிகுந்த இந்த நாளில் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வார்கள். வியாழனுக்கு உகந்தது மஞ்சள் நிற உடைகள். இந்த உடைகளை அணிந்தால் குருவின் அருள் கிடைக்கும். மன அமைதியும், வாழ்வில் மகிழ்ச்சியும் உண்டாகும். இன்றைய நாளில் நல்ல காரியங்களை செய்தால் அது மேலும் மேலும் வளரும் என்பது நம்பிக்கை .

வெள்ளிக் கிழமை:

வெள்ளிக் கிழமையின் அதிபதி செல்வத்தின் கடவுளான ஶ்ரீலட்சுமி தேவி. பொதுவாக வெள்ளிக்கிழமை அனைத்து கடவுள்களையும் வழிபட உகந்த நாளாக உள்ளது. அன்று கோயில்கள் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி இருக்கும். ஹிந்து மதம் மட்டுமல்லாது , வெள்ளிக் கிழமை அனைத்து மதத்தினருக்கும் வழிபாடு செய்ய ஏற்ற நாளாக உள்ளது. இந்த நாளில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிவது செல்வத்தையும் செழிப்பையும் தருகிறது. சிவப்பு நிறம் லட்சுமி தேவியின் அருளைப் பெற உதவுகிறது. வெள்ளை உடை அணிவது மன அமைதியையும் நிம்மதியையும் தருகிறது.

இதையும் படியுங்கள்:
தலைமுடி ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வாழைப்பழ ஹேர் மாஸ்க்!
Colours

சனிக் கிழமை:

சனிபகவானுக்கு உரிய நாளான சனிக்கிழமை வாரத்தின் கடைசி நாளாக உள்ளது. சனிபகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளாக இருப்பதால் அன்று கருநீலம் மற்றும் கருப்பு நிற உடைகளை அணிந்தால் அவரது அருளைப் பெற்று தருகிறது. இந்த நிறம் ஒரு நபருக்கு நீதி மற்றும் எதிர்ப்பினை குறைக்க உதவுகிறது. கருப்பு உடை அணிவதால் சனிபகவானின் தீவிரம் குறைந்து நல்ல அருள் கிடைக்கும். சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கருப்பு உடை அணிய கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com