எந்த விநாயகரை வணங்க என்ன பலன் கிடைக்கும்?

What are the benefits of worshiping any Ganesha?
What are the benefits of worshiping any Ganesha?https://www.hindutamil.in
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

விநாயகரை வழிபட, வினைகள் தீரும். முழுமுதற் கடவுளான விநாயகரை ஆலயத்திலும் வழிபடலாம், ஆற்றங்கரை மற்றும் அரச மரத்தடியிலும் வழிபடலாம். மஞ்சளிலோ, சந்தனத்திலோ, பசுஞ்சாணத்திலோ பிடித்து வைத்தும் கூட இவரை வழிபடலாம். விநாயகர் வழிபடுவதற்கு மிகவும் எளிமையானவர்.

அரசமரம், ஆலமரம், வன்னி மரம், வேப்பமரம் என பல வகையான மரத்தின் அடியில் வீற்றிருக்கும் கணபதியை, எந்த மரத்தடியில் வீற்றிருக்கிறாரோ அந்த மரத்திற்குரிய நட்சத்திரம், நாள் பார்த்து அவருக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபட, நினைத்த காரியங்கள் கைகூடும் என்பர்.

அந்த வகையில் விநாயகர் அமர்ந்து அருள்புரியும் ஐந்த மரங்கள் மிகவும் சிறப்புடையவை. இவை, ‘பஞ்சபூத மரங்கள்’ என அழைக்கப்படுகிறது. அவை: அரசமரம் – ஆகாயம், வாதநாராயண மரம் – வாயு, வன்னி மரம் – அக்னி, முழு நெல்லி மரம் – நீர், ஆலமரம் – மண். மேற்சொன்ன இந்த மரங்களின் அடியில் அமர்ந்து அருள்புரியும் விநாயகரை வழிபட வேண்டிய அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

இனி, சில மரத்தடி பிள்ளையார்களையும் அவர்கள் அருளும் பலன்களையும் பார்ப்போம்.

அரசமர பிள்ளையார்: அஸ்வத்தம் என்றால் அரசமரம். இது ஒரு ராஜ விருட்சம். அரச மரத்து நிழலில் வீற்றிருக்கும் விநாயகரை வணங்க, வினைகள் அகலும். அரச மரத்தடி விநாயகரை வழிபட குழந்தை பாக்கியம் கிட்டும்.

வன்னி மர பிள்ளையார்: வன்னி மர பிள்ளையாரை காண்பது அரிது. வன்னி மரத்திற்கு விசேஷ அம்சங்கள் பல உண்டு. வன்னி மரத்தடி விநாயகர் கிரக தோஷங்களை விலக்குவார். பாண்டவர்கள் வனவாசம் முடித்து ஒரு வருடம் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டபோது தங்களுடைய ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளை ஒரு வன்னிமரப் பொந்தில் மறைத்து வைத்திருந்தனர். பாரத யுத்தத்தின் போது வன்னிமரப் பொந்தில் மறைத்து வைத்திருந்த தங்கள் ஆயுதங்களை எடுத்து போரிட்டு யுத்தத்தில் வெற்றி பெற்றார்கள் என்பது புராணச் செய்தி‌. அத்தனை சிறப்பு பெற்ற வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட வெற்றி நிச்சயம் என்பதும், குடும்ப ஒற்றுமை மற்றும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
கண் திருஷ்டி, தீய சக்திகளை விரட்டும் ஊமத்தஞ்செடி!
What are the benefits of worshiping any Ganesha?

வில்வ மர விநாயகர்: வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகர் சிவ சொரூபமாக கருதப்படுகிறார். இவரை சதுர்த்தி நாளில் வழிபட்டு ஏழைகளுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்களை தானமாகக் கொடுத்து வில்வ மரத்தை வலம் வர தம்பதிகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகும்.

ஆலமரத்தடி விநாயகர்: ஆலமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை வழிபட கடுமையான நோய்கள் அகலும். இவரை பக்தியுடன் வழிபட ஞாலம் போற்றும் வாழ்வு அமையும்.

வேப்ப மரத்தடி விநாயகர்: வேப்ப மரத்தடி விநாயகரை வழிபட மனதுக்குப் பிடித்த வாழ்க்கை துணை அமையும்.

நெல்லி மரத்தடி விநாயகர்: பெண் குழந்தை வேண்டுவோர் நெல்லி மரத்தடி விநாயகரை வழிபடுதல் சிறப்பு.

logo
Kalki Online
kalkionline.com