
இது மில்லியன் டாலர் கேள்வி.
ஆனால் எந்தச் சிக்கலுக்கும் தத்துவத்தில் பதில் உண்டு.
தத்துவம் மற்றும் மனிதன் பற்றி பிறகு காண்போம்.
இப்போது தத்துவம் என்றால் என்ன? என்று மட்டும் பார்ப்போம்.
ஆம்.
மனிதன்.
சமுதாயம்.
இயற்கை.
என்று 3 விஷயங்களை கொண்டது இந்த பிரபஞ்சம்.
இந்த மூன்றும் சில விதிகளின்படி இயக்குகின்றன.
தத்துவத்தின் உண்மையை சொல்லப்போகும் முன்னர் ஒரு அடிப்படை உண்மையை எல்லோரும் உணர வேண்டும். மாறுதல் என்பதில் மாறுதல் இல்லை.
எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது. இது சத்தியம்.
இதை காரல் மார்க்ஸ் மற்றும் ஆதி சங்கரர் ஏற்றுக் கொள்கின்றனர்.
ஆம்.
மாறுதல் என்பதில் மாறுதல் இல்லை.
முதலில் மனிதனை எடுத்துக்கொள்வோம். மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை சில விதிகளால் இயக்கப்படுகிறான். இது மனிதன் அனைவருக்கும் பொருந்தும்.
விதிகளை பற்றி பிறகு பார்ப்போம்.
ஆம்.
அடுத்து சமுதாயம்.
மக்கள் கூட்டம். இதுவும் சில விதிகளால்தான் இயங்குகிறது. ஒட்டுமொத்த சமுதாயம் சில விதிகளால் இயங்குகிறது.
சரிதானே..?
ஆம்.
அடுத்து இயற்கை.
அம்மாடியோவ்… இயற்கை மிகப் பெரிது. பிரபஞ்சம் கூட இயற்கையின் ஒரு அங்கம்தான். இதில் சூரியன், சந்திரன், நட்சத்திரமும் அடங்கும்.
இவை அனைத்தும் சில விதிகளின்படிதான் இயங்குகிறது.
மனிதன், சமுதாயம் மற்றும் இயற்கை ஆகிய மூன்றும் தனி தனி விதிகளால் இயங்கவில்லை. மாறாக இந்த மூன்றும் சில பொதுவான விதிகளால் இயங்குகிறது.
ஆம்.
மனிதன் யார்?
மனிதன் வளர்ச்சி எது??
மனித மனம் என்ன செய்கிறது???
ஆம்.
அதேபோல் இந்தச் சமுதாயம் என்றால் என்ன?
மனித கூட்டமே சமுதாயம்.
இந்த சமுதாயம் எப்படி வளர்ச்சி பெறுகிறது??
சமுதாயத்தின் அடித்தளம் என்ன…???
ஆம்.
அடுத்து இயற்கை.
இதில் மனிதன் மற்றும் சமுதாயம் ஆகிய இரண்டும் அடங்கும். மேலும் மனிதன் மற்றும் சமுதாயம் இல்லாமல் பல கூறுகள் உள்ளன. சூரியன், சந்திரன், நட்சத்திரம் மட்டுமே விண்வெளி அல்ல. கோடானகோடி விண்மீன் உண்டு. நாம் இருக்கும் சூரிய மண்டலத்தின் பெயர்தான் 'பால் வெளி'.
இது போன்று பல்வேறு பால்வெளிகள் உண்டு.
ஆம்.
இவற்றின் இயக்கமும் ஒரு சில விதிகளால் ஆனது.
இப்போது நாம் ஒரு முடிவுக்கு வரலாம். மனிதன், சமுதாயம் மற்றும் இயற்கை எல்லாம் ஒரு சில பொதுவான விதிகளால்தான் இயங்குகிறது. தத்துவத்தின் அரிச்சுவடி இதுதான்.
இங்கு ஒன்றை மனதில் நிறுத்த வேண்டும்.
தத்துவம் என்பது மனித சிந்தனையின் விளைவு. அப்படி என்றால் மனிதனின் விதிகளில் மனிதன் மனதும், அறிவும் இரண்டும் பொது விதிக்கு உட்பட்டதுதான்.
இயற்கை இன்றி சமுதாயம் இல்லை. சமுதாயம் இன்றி மனிதன் இல்லை. மனித சிந்தனை இல்லாமல் எந்தத் தத்துவமும் இல்லை.
நாம் எல்லா இயக்கங்களிலும் உள்ள பொதுவான விதிகளை பார்க்கும்போது… ஒன்றை மட்டுமே ஆதாரமாக கொள்ள வேண்டும்.
ஆம்.
மாறுதல் என்பதே முதல் படி.
இதில் மாறுதல் இல்லை.
எல்லாமே மாறிக்கொண்டே இருக்கிறது.
இங்கு ஒரு சந்தேகம் வரலாம்.
எல்லாமே மாறும் என்றால் இந்த விதியும் மாறலாம் அல்லவா…?
ரொம்ப சரி.
மாறுதல் என்பதில் மாறுதல் இல்லை என்ற விதியும் மாறலாம். ஆனால் இதுவரை யாரும் இதை நிரூபிக்கவில்லை.
சரி… நான் ஒரு முறை மீண்டும் இக்கட்டுரையின் சாராம்சத்தை சொல்லி முடிக்க போகிறேன்.
ஆம்.
மனிதன்.
சமுதாயம்.
இயற்கை.
பற்றிய விதிகளை படிப்பதே தத்துவம் ஆகும்.
தத்துவம் இல்லாமல் சித்தாந்தம் இல்லை..? சித்தாந்தமா... அது என்ன.??
பார்ப்போம்…!