
எப்போதெல்லாம் மனிதம் சரியத் தொடங்கி, மனிதாபிமானம் சீரழிந்து மத வெறுப்பு ஆதிக்கம் காண்கிறதோ, அப்போதெல்லாம் ஆண்டவன் மீண்டும் கருணையுள்ளம் கொண்டு மனித இணக்கத்தைச் சீரமைக்கும் பொருட்டு பூமியில் அவதரிக்கச் செய்வார். இவ்வாறு அவதாரம் செய்பவர்கள், தெய்வாம்சம் பொருந்திய மகான்கள். அதாவது, அவதாரங்கள் என்று அழைக்கப்பட்டனர். இறைவன் அவதரித்த காலத்திலிருந்து இன்று வரை இந்தப் பூமியில் நூற்றுக்கணக்கில் அவதார மகான்கள் தோன்றியுள்ளனர். இனியும் பூமியில் சீரழிவு தோன்றுமாகின் இறைவன், அதே போன்ற மகான்களை அவதரிக்கச் செய்வார் என்பதும் இந்துக்களின் திடமான நம்பிக்கையாகும்.
ஆரம்பத்தில் சில வேளைகளில் மானிட இனங்களுக்கும் கீழான உயிரினங்களை அவதரிக்கச் செய்தார். முதலில் மீன், பின்னர் ஆமை, அதனைத் தொடர்ந்து, பன்றியென அவதாரங்கள் தோன்றின. பின்னர், மனிதனும் மிருகமும் இணைந்த உருவங்கள் அவதரித்தன. அதற்குப் பின்னரே, அவரது அவதாரப் பிறப்புகள் முற்றிலும் மானிடப் பிறவிகளாக இருந்தன.
ஆரம்ப கால உயிரின வடிவங்கள் எல்லாம் மீன் அல்லது நீர்வாழ் பிராணிகள் என்றே விஞ்ஞானம் தெளிவுபடுத்தியுள்ளது. அடுத்து வந்த ஊர்வன உயிரினமான ஆமைகள் இவற்றைத் தொடர்ந்து, பன்றிகள் போன்ற நிலம் வாழ் பிராணிகள். அவற்றுக்குப் பின்னர், மனித வர்க்கத்தின் முன்னோர்களில் முதல் மனிதன், தனது தோற்றத்தைக் காட்டினான். அவர்கள் முழுமையான மானிடன் அல்ல, மாறாக மனிதனும் மிருகமும் சேர்ந்த கலவையாகும். இவைதான் நாளடைவில் மனிதர்களாக உருப்பெற்றார்கள்.
முந்தைய கால தெய்வாம்சம் பொருந்திய அவதாரங்களுக்கும், பூமியில் உயிரினங்கள் கொண்டஇறைவன் மனித உருவம் எடுக்காமல் மாற்று உருவங்களில் ஏன் அவதரிக்க வேண்டும் என நினைக்கத் தோன்றுவது இயல்பே. இதனை விளக்க வேண்டுமெனில், கருணையுள்ளம் இறைவன் ஒருவரால்தான் சகல ஜீவராசிகளும் இந்தப் பிரபஞ்சத்தில் சிருஷ்டிக்கப்பட்டன.
கடவுளின் முடிவற்ற கருணையால் பூமியில் தெய்வாம்சங்களோடு மீண்டும் அவதாரம் செய்வதென்றால் அவரால் படைக்கப்பட்ட ஜீவராசிகளில் வேறுபாடு எவ்வாறு இருக்க முடியும்? மானிடப் பிறவியும், மானிடத்திற்கு கீழான பிறவியும் அவரது படைப்புதானே. பின் எங்கிருந்து பாகுபாடு அல்லது பிரிவினை தோன்றும்? இல்லையென்றால் ஆண்டவன் பாரபட்சமானவர். ஒருபக்கம் சார்ந்தவர் என்றல்லவா பேதங்கள் உண்டாகிவிடும். இது ஏற்புடையதல்லவே.
இறைவன் பூமியில் அவதாரம் மேற்கொள்வது இரு நோகங்களுக்காக. ஒன்று உணர்த்துவதற்கும், மற்றொன்று விடுவிப்பதற்கும். அவர் மனித குலத்தை பல உதாரணங்கள் மூலம் உணர வைக்கிறார். அதற்காக மானிடர்களுக்குரிய கட்டுப்பாடுகளைத் தாமே மனமுவந்து கமந்து ஏற்றுக் கொள்கிறார். பின் ஆன்மிகப் பரிசோதனைகள் மூலம் அவர்களிடத்து கொண்டு சென்று தனது ஆன்மிக பூரணத்துவத்தைப் பதிய வைத்தார்.
எப்படி ஒரு கோழி தனக்குப் பசியில்லாத நேரத்தில், தரையில் கிடக்கும் தானியத்தைத் தேடியலைந்து கொத்தி, அதனை விழுங்குவது போல் பாவனை செய்வதெல்லாம் தனது வாரிசுகளுக்குக் கற்றுக் கொடுக்கும் (நாடகம்) செயல்பாட்டைப் போலவே, மானிடர்கள் முழுமையை, பூரணத்துவத்தை எய்த வேண்டுமென்றால், எப்படியெல்லாம் ஆன்மிகப் பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும் என்பதைக் சுற்றுக் கொடுக்கும் நோக்கில்தான், அவதார ஞானிகளும் தங்களை ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆண்டவனிடம் முழுமையாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை கரைசேர்த்து அவர்களைப் பூரணத்துவம் பெற இந்த அவதார ஞானிகள் உதவி செய்கிறார்கள். இது கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் உரைத்தது.