கொலு முடிந்து பொம்மைகளை எப்போது படுக்க வைக்க வேண்டும்?

கொலு முடிந்து பொம்மைகளை எப்போது படுக்க வைக்க வேண்டும்?
Published on

வராத்திரி நம் பாரதத்தின் பிரசித்தி பெற்ற பண்டிகை. வருடத்தில் நான்கு முறை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆனி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி என்றும் வாராஹி நவராத்திரி என்றும் வழங்கப்படுகிறது. இந்த ஒன்பது நாட்கள் வாராஹி அம்மனுக்கு விசேஷமாக வழிபாடு நடத்தப்படுகிறது.

புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை முதல் நவமி வரை வரும் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவி ஆகியோருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

தை மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை முதல் நவமி வரையிலான ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி என்று அன்னை இராஜமாதங்கி தேவியை குறித்து வழிபடும் நாட்களாக அமைகின்றன.

கடைசியாக. பங்குனி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் பிரதமை முதல் நவமி வரை கொண்டாடப்படுவது சைத்ர நவாராத்திரி என்றும் வசந்த நவராத்திரி என்றும் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கொலு டிப்ஸ் -12
கொலு முடிந்து பொம்மைகளை எப்போது படுக்க வைக்க வேண்டும்?

தென்னிந்தியாவில் புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்குப் பிறகு வரும் நவராத்திரிதான் பெருவாரியான மக்களால் பிரதானமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கையை ஆராதிப்பதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் மனதுக்கு தைரியமும் கிடைக்கிறது. இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியை ஆராதிப்பதால் குடும்பத்தில் கணவன், மனைவியிடையே அன்யோன்னியம் அதிகரிப்பதோடு, சுபிட்சம் அபரிமிதமாகக் கிடைக்கிறது. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை ஆராதிக்கும்போது கல்விச் செல்வம் வளருகிறது, கலைகள் வளர்கின்றன, ஞானம் ஸித்திக்கிறது.

நவராத்திரியின் முதல் நாள் தேவியின் விழியை திறக்கும்போது (மையிட்டு) பக்கத்தில் சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை வைத்துக் கொண்டுதான் திறக்க வேண்டும். நீண்ட நாட்கள் கழித்துக் கண் விழிக்கும்போது தேவி அகோரப் பசியிலிருப்பாள். தினமுமே ஐந்து வேளை பால் பாயஸம், மஹா நைவேத்தியம் (சாதம், பருப்பு, நெய் போன்றவை) சுண்டல், பானகம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒன்பது கன்யா பெண்களை பூஜிக்க விஜயதசமிதான் உகந்த நாள். கொலு முடிந்து பொம்மைகளைப் படுக்க வைக்கும்போது இரவு 11.55க்குள் படுக்க வைப்பது சாலச் சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com