வீட்டில் ஆமை சிலை எங்கு எப்படி வைக்க வேண்டும்? பலன்கள் என்ன?

Tortoise
Tortoise
Published on

ஆமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம். அதனால் வீட்டில் ஆமை சிலை வைப்பது நல்ல பலன் தரும்.

இந்து மத நம்பிக்கைகளின்படி, பல விலங்குகள் மற்றும் பறவைகள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஆமை. இது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதாக நம்பப்படுகிறது. சிலர் வீட்டின் பூஜை அறையில் ஆமை சிலை வைத்திருப்பார்கள். வீட்டில் ஆமை சிலை வைப்பதன் பலன்களை தெரிந்து கொள்வோம்.

ஆமை சிலைகளை வீட்டில் வைத்திருப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று அவை வழங்கும் பாதுகாப்பு உணர்வு. பல மரபுகளில், ஆமைகள் வீட்டின் பாதுகாவலர்களாக பார்க்கப்படுகின்றது. தீய சக்திகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்க இந்த ஆமை சிலை உதவும். உங்கள் வீட்டில் ஒரு ஆமை சிலையை வைப்பதன் மூலம், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பாதுகாப்பு உணர்வை உருவாக்க முடியும்.

பல கலாச்சாரங்களில், ஆமைகள் நல்ல சகுனம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. உங்கள் வீட்டு அலங்காரத்தில் ஆமை சிலைகளை சேர்ப்பதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நீங்கள் அழைக்கலாம். உங்கள் வீட்டின் அலமாரியில் அல்லது டேபிள் மீது இந்த ஆமை சிலைகளை வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
விடுமுறைக்காக வெளியூர் செல்லும்போது பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கங்கள் தெரியுமா?
Tortoise

பலர் ஆமை ஓடு மோதிரங்களை அணிந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த ஆமை மோதிரம் வெள்ளிக்கிழமை, அட்சய திருதியை, தீபாவளி அல்லது தனத்ரயோதசியில் அணிவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மேலும், இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும்.

பலர் தங்கள் வீடுகளில் உலோக ஆமையையும் வைத்திருக்கிறார்கள். ஃபெங் சுய் படி, ஒரு உலோக ஆமை வடக்கு திசையில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும், உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற விரும்பினால், ஒரு வெற்று காகிதத்தில் சிவப்பு பேனாவால் உங்கள் விருப்பத்தை எழுதுங்கள். பின்னர் இந்த சீட்டை ஆமைக்குள் வைக்கவும். அதுவும் அதை வடக்கு திசையில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் விருப்பங்கள் விரைவில் நிறைவேறுமாம்.

பிரதான நுழைவாயிலில் ஆமை படத்தை வைத்தால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இதனுடன் எதிர்மறை ஆற்றல் வீட்டை விட்டு விலகும் மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை.

அதே போல நாம் கிரிஸ்டல் எனப்படும் ஸ்படிகத்தால் ஆன ஆமை சிலைகளை வைக்கலாம். இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். ஸ்படிக ஆமையை நாம் தென்மேற்கு திசையில் வைக்கலாம். இதன் மூலம் செல்வ வளம் அதிகரிக்கும். வடகிழக்கு பகுதியில் ஸ்படிக ஆமையை வைப்பதனால் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

படுக்கை அறையில் ஆமை சிலையை வைத்திருந்தால் தூக்கக்குறைபாடுகள் நீங்கும்.

ஆமை சிலையை கண்ணாடி கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி போட்டு வைப்பதனால் நல்ல அதிர்வுகள் ஏற்படும். செல்வம் பல மடங்காக அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
பிப்ரவரி 27: பன்னாட்டுத் துருவக் கரடி நாள் - துருவக் கரடிகள் உள்ளங்கையால் மூக்கை மூடி வேட்டையாடுவது ஏன்?
Tortoise

ஆமை ஓடு மோதிரம் அணிவது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தையும் கொண்டு வரும். ஆமை மோதிரம் அணிவதற்கு முன்பு நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். வெள்ளிக்கிழமையில்தான் ஆமை மோதிரத்தை வாங்க வேண்டும். வீட்டிற்கு கொண்டு வந்ததும், பாலில் போட்டு வைக்க வேண்டும். மோதிரத்தை சுத்தம் செய்த பிறகு, வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் இந்த மோதிரத்தை அணிவது மங்களகரமானது என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com