இந்து சமயத்தினரிடையே “முப்பத்தி முக்கோடி தேவர்கள்” என்ற வாக்கியம் அதிகமான பயன்பாட்டிலிருக்கிறது. முப்பத்தி முக்கோடி தேவர்கள் எண்ணிக்கையில் இருக்கின்றனரா? என்று எல்லோருக்குள்ளும் ஒரு கேள்வி எழுவது இயல்பே. முப்பத்தி மூன்று தேவர்களே முப்பத்தி முக்கோடி தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அதாவது,
வேதகால ஆரிய மக்களின் தேவர்களாக, 1. வருணன், 2. மித்திரா, 3. ஆர்யமான், 4. பாகன், 5. யமன், 6. அம்சன், 7. துவஷ்டா, 8. பூஷண், 9. சூரியதேவன், 9. சாவித்தர், 11. இந்திரன், 12. விஷ்ணு என்கிற பன்னிரு ஆதித்தியர்களும், 1. புவி, 2. அக்னி, 3. ஆகாயாம், 4. நீர், 5. காற்று, 6. சூரியன், 7. நட்சத்திரங்கள், 8. சந்திரன் ஆகிய எட்டு இயற்கைப் பொருட்களை ஆள்பவர்கள் அஷ்ட வசுக்கள் எனும் எட்டு வசுக்களும், 1. ஆனந்தம் (பேரின்பம்), 2. விஞ்ஞானம் (பகுத்தறிவு), 3. மனம் (எண்ணங்கள்), 4. பிராணன் (மூச்சுக் காற்று அல்லது வாழ்க்கை), 5. வாக் (நா வன்மை), 6. ஈசானன், (உலகை ஆட்சி செய்பவர்), 7. தத்புருஷம், (பரம் பொருள்), 8. அகோரர் (கோபமற்றவர்), 9. வாமதேவம் (அமைதியானவர்) 10. சத்யோஜாதம் (நினைத்தவுடன் பிறப்பவர்), 11. ஆத்மன் எனப்படும் பதினொன்று ருத்திரர்களும் சேர்ந்து மொத்தம் 31 தேவர்களாகவும், அவர்களுடன் இந்திரன் மற்றும் பிரஜாபதி ஆகியோரையும் சேர்த்து முப்பத்தி மூன்று தேவர்கள் இருப்பதாக ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முப்பத்தி மூன்று தேவர்களையேத் தற்போது, முப்பத்தி முக்கோடி தேவர்கள் என்று அழைக்கின்றனர்.