ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் இருக்க சந்திராஷ்டமத்தை கண்டு பயம் ஏன்?

Don't be afraid of Chandrashtama
Sri Chandramouleswarar
Published on

வகிரகங்களில் சூரியன் மற்றும் சந்திரனின் அடிப்படையிலேயே நம்முடைய ஜாதகம் மற்றும் பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இந்த இரு கிரகங்களின் நகர்வுகளைப் பொறுத்தே நம்முடைய உணர்வுகள் மற்றும் உறவுகள் அமையும். ஒவ்வொரு ராசிகளுக்கும் பலன் சொல்லும்போது சந்திராஷ்டமம் என்ற வார்த்தையை குறிப்பிடுவது உண்டு. சந்திராஷ்டமம் என்றால் கவனமாக இருக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும். ஆனால், சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்த நாளில் எதற்காக கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்?

சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்கிறார். எனவே, ஒவ்வொருவருக்கும் ஒரு மாதத்தில் இரண்டே கால் நாட்கள் சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும். இந்த காலத்தைத்தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம். சந்திராஷ்டமம் = சந்திரன்+அஷ்டமம். அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள். உடலுக்கும் மனதிற்கும் காரணமான சந்திரன் ஜன்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும்போது சந்திராஷ்டமம் ஏற்படுகின்றது‌ அல்லது நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் சந்திராஷ்டமம்.

இதையும் படியுங்கள்:
சச்சிதானந்த தத்துவம்: சோமாஸ்கந்த திருக்கோல தரிசன சிறப்பு!
Don't be afraid of Chandrashtama

ஜோதிடத்தில் சந்திரன் மனோகாரகன் என்று அழைக்கப்படுகிறார். நம் மனதையும் எண்ணங்களையும் வழிநடத்தும் சந்திரன் மறைவு ஸ்தானமான எட்டாம் இடத்தில் மறைந்தால் உடலும் மனமும் சந்திர அஷ்டமத்தில் பயணிக்கும். அந்த இரண்டே கால் நாட்கள் பலவிதமான இன்னல்களை உடல் அனுபவிக்கின்றது. அவருடைய பார்வை நமது ஜன்ம ராசியின் இரண்டாம் இடமான குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் பலவிதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, நம்முடைய பேச்சினால் வம்புகள் வந்து சேர்கின்றன.

நமது ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் உலா வரும்போது கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளில் ஈடுபடும்பொழுது மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. முகூர்த்தம் வைக்கும்பொழுது, தாலி கட்டும் நேரம் சந்திராஷ்டமமாக இருந்தால் குடும்ப ஒற்றுமை குறையும். சாந்தி முகூர்த்தம் சந்திராஷ்டம நாளில் இருந்தால் தாம்பத்திய சுகம் குறையும், உடல் நலம் பாதிக்கும். இருப்பினும் விருச்சிகம், கடகம், ரிஷபம் போன்ற ராசிகளுக்கு நீச்ச உச்ச சொந்த வீட்டுக்காரகனாக சந்திரன் இருப்பதால் அந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிக்காது.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு தெரியாத தீபாவளி: தமிழகத்தில் சிவ பூஜையுடன் அனுசரிக்கப்படுவதன் காரணம்!
Don't be afraid of Chandrashtama

சில வருடங்களுக்கு முன்பு சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோயிலுக்கு வந்த சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் சிவனுக்கு அபிஷேகம்  செய்யாமல் இருக்கக் கூடாது எனக் கூறி சந்திரமௌலீஸ்வரர் ஸ்படிக லிங்கத்தை வழங்கி தினமும் அபிஷேகம் செய்து வருமாறு கூறினர். அதன் பிறகு தினமும் சங்கரநாராயணர் சன்னிதியில் உள்ள ஸ்படிக லிங்கத்திற்கு பால், பன்னீர் போன்ற அபிஷேகம் செய்யப்படுகிறது. சந்திராஷ்டம காலங்களில் நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள். ஆனால், அந்த நாட்களில்தான் செய்ய வேண்டிய நிலை வரும் பட்சத்தில் சந்திரமௌலீஸ்வரரை வணங்கினால் அந்தத் தடை விலகும் என்பது ஐதீகம்.

அது மட்டுமல்ல, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாதமும் சந்திராஷ்டமம் வரும். சொல்ல முடியாத கஷ்டங்கள், தடைகள், வேதனைகள் என்று சந்திராஷ்டம நாளில் அனுபவிக்க வேண்டியது வரும். அந்த சமயத்தில் சங்கரன்கோவில் சந்திரமௌலீஸ்வரரை மனதால் நினைத்து, மானசீகமாக வணங்கினால் சந்திராஷ்டம தினத்தின் தாக்கம் வெகுவாகக் குறையும். இனி உங்களுக்கு சந்திராஷ்டமம் என்று தெரிந்தால் சங்கரன்கோவில் சந்திரமௌலீஸ்வரரை மனதால் நினைத்து வணங்குங்கள். மானசீகமாக வணங்கினாலே சந்திராஷ்டம தினத்தின் தாக்கம் வெகுவாகக் குறைந்து விடும். சந்திராஷ்டமத்தை கண்டு இனி பயம் வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com