சகுனங்கள் மூலம் நம் காரியத்தில் வெற்றி கிடைக்குமா?

Luck sign
Luck sign
Published on

நாம் வீட்டை வீட்டு செல்லும் போது நாம் செய்யப்போகும் காரியத்தில் தடை ஏற்படுமா? அல்லது வெற்றிக் கிட்டுமா? என்பதை சில சகுனங்கள் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1. கிராமபுரங்களில் பொதுவான இடத்தில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்வது வழக்கமாகும். நாம் வீட்டை விட்டு செல்லும் போது எதிரிலே நிரை குடத்தில் தண்ணீர் எடுத்துச் சென்றால் நாம் செய்ய போக்கும் காரியம் பரிபூரண வெற்றியடையும் என்று சொல்லப்படுகிறது. நிறை குடம் ஐஸ்வர்யத்தையும், செல்வத்தையும், மகாலக்ஷ்மி அம்சத்தையும் குறிக்கும்.

2. நாம் ஒரு காரியம் வெற்றியடைய வேண்டும் என்று நினைத்து போகும் போது அந்த காரியம் நல்லப்படியாக நடக்க வேண்டும் என்று மனதார வாழ்த்தக்கூடிய சிரித்த முகத்தோடு வழியனுப்பி வைக்கக்கூடிய முகராசிக் கொண்ட நபர் வந்தால் காரியம் வெற்றியடையும்.

3. நம் முன்னோர்களின் அடையாளமாக சொல்லப்படும் காகம் நாம் வெளியிலே செல்லும் போது இடமிருந்து வலமாக சென்றால் அந்த காரியம் வெற்றியடையும் என்று சொல்லப்படுகிறது.

4. நாம் வெளியிலே செல்லும் போது கர்ப்பிணி பெண்களை பார்த்தால் விஷேசம் என்று சொல்லப்படுகிறது. நாம் செய்ய நினைத்த காரியம் நல்லப்படியாக நடக்கும். இதை நல்ல சகுனமாக சொல்கிறார்கள்.

5. ஏதோ ஒரு காரியமாக வெளியில் செல்லும் போது பிண ஊர்வலத்தை பார்த்தால் அந்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

6. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்க வேண்டும் என்று நினைத்தால், குலதெய்வ வழிப்பாடு அவசியமாகும். குலதெய்வத்தை மனதில் நிறுத்தி வேண்டிக்கொண்டு செய்யும் காரியம் நிச்சயம் நடக்கும் என்று நம்பப்படுகிறது.

7. நம் வீட்டில் பூஜையறையில் பயன்படுத்தும் காமாட்சி விளக்கு எண்ணெய்யை வெளியிலே செல்லும் போது நெற்றியில் வைத்துக்கொண்டால் அதுவும் நல்ல காரிய சித்தியை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

சுபக்காரியம் ஏதேனும் செய்யத் தொடங்குவதற்கு முன் எக்காரணத்தைக் கொண்டு சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு கிளம்பக்கூடாது. சண்டைப் போட்டு அவர்களின் கண்ணீரை பார்த்துவிட்டு தொடங்கும் காரியம் நடக்காது என்று சொல்லப்படுகிறது. இந்த சகுனங்களை நம் வாழ்வில் பார்த்து நடந்தால், நம் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பெருமாள் சுயம்புவாக எழுந்தருளியக் கதை தெரியுமா?
Luck sign

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com