

பெண்களை தெய்வத்திற்கு சமமாக ஒப்பிடுவார்கள். செல்வத்தின் அதிபதியான 'மகாலக்ஷ்மியின் அம்சம்' என்று சொல்வார்கள். ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்துவிட்டாலே அந்த வீட்டில் செல்வமும், ஐஸ்வர்யமும் வந்துவிட்டது என்பது நம்பிக்கை. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த பெண்கள் மீது தப்பித்தவறிக்கூட இந்த வாசனைகள் வந்துவிடக் கூடாது என்று சாமுத்திரிகா லட்சணத்தில் (Samudrika Lakshana) சொல்லப்படுகிறது.
பெண்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டுதான் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும் சமையலறையில் நுழைய வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. அத்தகைய பெண்கள் மீது மாமிச வாசனை வீசக்கூடாது என்று சொல்கிறார்கள். பெண்களின் கைகள் லக்ஷ்மி கடாட்சம் உடையது. அவர்கள் கைகள் மூலம் ஒரு விஷயத்தை தொடங்கும் போது மிக பெரிய வெற்றி கிடைக்கும். ஆனால், அவர்கள் மீது மாமிச வாசனை வீசினால் கைராசி, அதிர்ஷ்டம் குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள். அதனால் பெண்கள் அசைவம் சமைத்த பிறகு குளித்துவிட்டால் மாமிச வாசனை வீசாது.
வேப்பிலை மிகவும் புனிதமாக கருதப்படக்கூடிய மூலிகை. இது வீட்டில் பூச்சிகளும், விஷஜந்துக்களும் வராமல் தடுக்கிறது. இந்த வேப்பிலை வாசனை பெண்கள் மீது வீசக்கூடாது. அவ்வாறு வீசினால் குழந்தை பாக்கியம் தள்ளிப்போகும், காரியத்தடை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. பெண்கள் மீது கசப்பு வாசனை வீசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடிய கற்றாழையை பெண்கள் பயன்படுத்துவார்கள். ஆனால், அதை பயன்படுத்திய பிறகு நன்றாக கற்றாழை வாசனை போகுமளவிற்கு குளித்துவிட வேண்டும். பெண்கள் மீது கற்றாழை வாசனை வீசினால் லக்ஷ்மி கடாட்சம் போய்விடும் என்று சொல்லப்படுகிறது.
மது, புகையிலை போன்றவை ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுங்கீனத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க, அமைதி, நல்லெண்ணம் சார்ந்த நறுமணங்களே உகந்தவை என்று கருதப்படுகிறது.
சமையல் வாசனை இருந்தாலும், அழுக்கான, நீக்கப்படாத எண்ணெய் பிசுக்கு வாசனையாக இருப்பது வீட்டில் லட்சுமி கடாட்சத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. சமையலறை மற்றும் பாத்திரங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.
தனிப்பட்ட சுத்தமின்மை, துர்நாற்றம் ஆகியவை எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாகக் கருதப்படுகிறது. சாமுத்திரிகா லட்சணத்தின்படி, ஒரு பெண் தன்னுடைய உடல், ஆடை, மற்றும் தலைமுடியை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். பெண்கள் எப்போதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் இருப்பது சுபீட்சத்தை ஈர்க்கும். இந்த வாசனைகள் இல்லாத பெண்கள் வீட்டில் லக்ஷ்மி கடாட்சமும், ஐஸ்வர்யமும் நிறைந்திருக்கும்.