குளு குளு குன்னூரில் பார்க்க வேண்டிய அட்டகாசமான 10 இடங்கள்!

குன்னூர் இரயில் நிலையம்
குன்னூர் இரயில் நிலையம்

1. குன்னூர்

குன்னூர்
குன்னூர்

தகை செல்வதற்கு முன்பாக சுமார் 20 கி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குன்னூர். உதகையில் சில நாட்கள் தங்கியிருந்து வர விரும்புவோர், குன்னூரில் தங்க வாய்ப்பும் வசதியும் உள்ளது. செலவும் குறைவு. அழகும் அதிகம். மலைப் பிரதேசமான இங்கும் அழகு மிகுந்த இயற்கைக் காட்சிகள் ஏராளம். சிறுவர்கள் மகிழ்ந்து விளையாட பூங்காக்களும் உண்டு.

2. சிம்ஸ் பூங்கா

சிம்ஸ் பூங்கா
சிம்ஸ் பூங்கா

குன்னூரின் மேல்புறத்தில் உள்ளது சிம்ஸ் பூங்கா. தமிழக அரசின் தோட்டக்கலை பராமரிப்பில் உள்ள இப்பூங்கா, அழகிய புல்வெளிப் பாதை, மரம், செடிகள், மூலிகைச் செடிகள் என்று இயற்கை எழில் ததும்பக் காட்சியளிக்கிறது. மட்டுமல்லாமல் காய்கறித் தோட்டங்களும் உள்ளது கூடுதல் சிறப்பு.

3. லாஷ் நீர்வீழ்ச்சி

லாஷ் நீர்வீழ்ச்சி
லாஷ் நீர்வீழ்ச்சி

குன்னூரில் இருந்து 7 கி. மீட்டர் தொலைவில் உள்ளது லாஷ் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி பாறைகள் நிறைந்து காட்சியளிக்கிறது, உயரிய மலைகளும், அடர்ந்த காடுகளும் இந்த நீர்வீழ்ச்சியின் அழகை மேலும் பன்மடங்கு அதிகரிக்கிறது. இயற்கையை ரசிக்கும் மனம் உள்ளவர்கள், இந்த இடத்தைப் பார்த்தால் 'சட்'டென்று திரும்ப மனமே வராது.

4. கோத்தகிரி

கோத்தகிரி
கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் உதகைக்கு அடுத்ததாகக் குறிப்பிட்டுச் சொல்லப்படும் மற்றொரு நகர் கோத்தகிரி, நிகி. மீட்டர் தொலைவில் உள்ளது. உதகையில் இருந்து இங்கு தேயிலைத் தோட்டங்கள் எங்குபார்த்தாலும் பரந்து விரிந்து கிடக்கிறது. காணக் கோடிக் கண்கள் வேண்டும். வனப் பிரதேசங்கள் கொள்ளை அழகு.

5. கொடநாடு

கொடநாடு
கொடநாடு

கோத்தகிரியில் இருந்து 18 கி. மீட்டர் தொலைவில் உள்ளது கொடநாடு. இங்குள்ள காட்சி முனை மிக அற்புதமான இடம். இங்கிருந்து பார்த்தால் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாகப் பிரித்துச் செல்லும் நதியின் பேரழகைப் பார்த்து ரசிக்க முடிகிறது. இங்கு தேயிலைத் தொழிற்சாலை ஒன்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
மனதை வருடும் மயிலிறகு வார்த்தைகள்!
குன்னூர் இரயில் நிலையம்

6. ரங்கசாமி பீக் அன்ட் பில்லர்

ரங்கசாமி பீக் அன்ட் பில்லர்
ரங்கசாமி பீக் அன்ட் பில்லர்

ங்கசாமி பீக் அன்ட் பில்லர் என்னும் கூம்பு வடிவில் அமைந்திருக்கும் இதன் உச்சியில் இருந்து பார்த்தால், மலைப் பிரதேசம் அனைத்தும் அற்புத அழகாகக் கண்களைக் குளிர்ச்சிப்படுத்தும். கோத்தகிரியில் இருந்து 20 கி. மீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பகுதியில்' பழங்குடியினரான இருளர்கள் அதிகளவில் வாழ்கின்றனர்

7. முக்குர்தி நேஷனல் பார்க்

முக்குர்தி நேஷனல் பார்க்
முக்குர்தி நேஷனல் பார்க்

தகையில் இருந்து 40 கி. மீட்டர் தொலைவில் மலையின் உச்சியில் முக்குர்தி நேஷனல் பார்க் அமைந்துள்ளது. இங்கு ஆறுகளும், முக்குர்தி ஏரியும் உள்ளது. இதில் மீன்பிடித்து மகிழ்வது சிறப்புக்குரிய அம்சம். பிப்ரவரி முதல் மே மாதம் வரை இப்பகுதியில் சுற்றுலாச் செல்வதற்கு உகந்த காலமாகும்.

8. அருங்காட்சியகம்

அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்

1989ஆம் ஆண்டு உதகையில் திறக்கப்பட்டது அருங்காட்சியகம். உதகையில் இருந்து மைசூர் செல்லும் வழியில் உதகை நகரின் கிளப் சாலையில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். இங்கு வாழ்ந்த தோடர் என்னும் பழங்குடியின மக்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர், கல் சிற்பங்கள், வெண்கல வேலைப்பாடுகள், பழைய நாணயங்கள் போன்றவைகளும் இங்கு உள்ளன.

9. தொட்டபெட்டா

தொட்டபெட்டா
தொட்டபெட்டா

தகையில் இருந்து 8 கி. மீட்டர் தொலைவில் உள்ளது தொட்டபெட்டா. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8640 அடி உயரத்தில் அமைந்துள்ள இம்மலையின் உச்சிவரை செல்வதற்கு நல்ல சாலை வசதிகள் உண்டு. இங்குள்ள கண்ணாடி அறையில் இருந்து மலையின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். 

10. தவளை மலை

தவளை மலை
தவளை மலை

தகையில் இருந்து 15 கி. மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது தவளை மலை பார்வை முனை என்ற இடம். இங்கிருந்து பார்த்தால் மலையொன்று தெரிகிறது. அந்த மலை தவனை வடிவில் காட்சியளிப்பதால் அந்த முனைக்கு இப்பெயர் வந்தது இங்கிருந்து முதுமலை விலங்குகள் சரணாலயத்தைப் பார்த்து மகிழ முடியும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com