இந்தியாவில் உள்ள மிஸ் பண்ணக் கூடாத 3 அழகான இடங்கள்!

Warichora meghalaya
Warichora meghalayaImage Credits: WanderOn
Published on

ம் இந்தியாவில் கூட இப்படிப்பட்ட அழகான இடங்கள் இருக்கிறதா? என்று நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய 3 அழகான இடங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1.Warichora, Meghalaya.

அடர்ந்த காடுகளுக்கு நடுவிலே உள்ள அழகான பள்ளத்தாக்குதான் இது. மிகவும் குறுகலான மற்றும் ஆழமாக இருக்கும் இந்த இடத்திற்குள் வரும் சூரிய ஒளியை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் பச்சைநிற ஆற்றில் போட்டிங் போவது மிகவும் அற்புதமாக இருக்கும். இவ்விடத்தை Home of seven giant serpents என்று கூறுவார்கள். இந்த ஆறு 45 அடி ஆழமும், 500 மீட்டர் நீளமும் கொண்டதாகும். Wari என்றால், ஆழமான தண்ணீர் என்றும் chora என்றால் நீளம் என்றும் பொருளாகும்.

Purwa Waterfalls Madhya pradesh
Purwa Waterfalls Madhya pradeshImage Credits: Jabalpur Explore

2. Purwa waterfalls, Madhya Pradesh.

மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் அமைந்துள்ள Tamsa ஆற்றில் 230 அடி உயரத்திலிருந்து விழுகிற இந்த நீர்வீழ்ச்சி ரொம்பவே செங்குத்தான பள்ளத்தில் விழுகிறது. அதுவும் மழைக்காலங்களில் இந்த அருவியில் நிறைய தண்ணீர் விழுவதைக்காண ரொம்பவே பிரம்மாண்டமாய் இருக்கும். இந்த நீர்வீழ்ச்சி புனிதமாகவும் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது.

Yana caves Karnataka
Yana caves KarnatakaImage Credits: Sahyog mantra Tours

3.Yana caves, Karnataka.

Yana குகைகள் கர்நாடகாவில் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கும்தா என்னும் இடத்தில் அமைந்துள்ளது.  கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த குகை இயற்கையாகவே உருவான சுண்ணாம்புக் கற்களால் ஆனதாகும். இந்த குகை இயற்கையாகவே உருவான அதன் தனித்துவமான வடிவமைப்பு முறைக்கு பெயர் போனதாகும். இந்த குகை அடர்ந்த காடுகளுக்கு நடுவிலே மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருக்கும் இரண்டு மிகபெரிய பாறைகளில்தான் அமைந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
பழநியிலிருந்து முருகன் தாண்டிக் குதித்த இடம் எங்குள்ளது தெரியுமா?
Warichora meghalaya

200 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலையும், குகையும் உலகத்தில் இருக்கும் இடங்களிலேயே மிகவும் ஈரப்பதமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கோக்கர்னாவில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த குகையில் உள்ள Bhairaveshwara shikara and Mohini shikara என்னும் இரண்டு 120 மீட்டர் உயரம் கொண்ட மலைகள் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது என்று சொல்ல வேண்டும். இந்த 3 அழகிய இடங்களில் உங்களை கவர்ந்தது எதுவென்று சொல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com