'கிழக்கின் ஸ்காட்லாந்து' மேகாலயா! பார்க்கவேண்டிய 4 இடங்கள்!

Meghalaya
Meghalaya

மேகாலயா என்றாலே மேகங்களின் உறைவிடம் என்று பொருள். வடகிழக்கு இந்தியாவில் உள்ள அழகான கிராமமான ஷில்லாங்கை தலைநகரமாகக் கொண்டுள்ளது மேகாலயா. நகரத்தை சுற்றியுள்ள மலைகள் ஆங்கிலேயர்களுக்கு ஸ்காட்டிஷ் உணர்வை கொடுத்ததால் இது 'கிழக்கின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படுகிறது.

1. சிரபுஞ்சி:

மாவ்லின்னோங் வில்லேஜ்
மாவ்லின்னோங் வில்லேஜ்

சோஹ்ரா என்று அழைக்கப்படும் சிரப்புஞ்சி, ஷில்லாங்கிலிருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகான ஒரு கிராமமாகும். மேகாலயாவின் ஜுவல் க்ரேஸ்ட் (jewel crest) என்று அழைக்கப்படும் சிரப்புஞ்சி, கிழக்கு காசி மலைகளில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. உலகிலேயே அதிக மழை பெய்யும் இடமாக இது உள்ளது. இங்கு புகழ்பெற்ற பல நீர்வீழ்ச்சிகள், சுண்ணாம்பு குகைகள் உள்ளன. முதலில் சோஹ்ரா என்று அழைக்கப்பட்ட சிரப்புஞ்சி, ஆங்கிலேயர்களால் 'சுர்ரா' என்று உச்சரிக்கப்பட்டு பின்பு அது 'ஆரஞ்சு நிலம்' என்று பொருள்படும் வகையில் 'சிரப்புஞ்சி'யாக மாறியது. இங்கு பெருமளவில் காடுகள் அழிக்கப்படுவதால் சிரப்புஞ்சி மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்குப் பிறகு இந்த இடம் மிகவும் வறண்டு விடுகிறது என்றும் கூறுகிறார்கள். ஏராளமான மழைப்பொழிவு இருந்தாலும் இங்கு கடுமையான நீர் பற்றாக்குறை உள்ளதாக கூறுகிறார்கள். நல்ல குடிநீரைப் பெற மக்கள் நீண்ட தூரம் மலை ஏற வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

2. நோஹ்கலிகை நீர்வீழ்ச்சி(Nohkalikai):

சிரபுஞ்சியில் உள்ள நோஹ்கலிகை நீர்வீழ்ச்சி
சிரபுஞ்சியில் உள்ள நோஹ்கலிகை நீர்வீழ்ச்சி

காசி மலையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். இது சுமார் 1,115 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. தண்ணீர் விழும் சத்தமும், பிரமிக்க வைக்கும் பசுமையான பின்னணியும் கொண்டது. நீர்வீழ்ச்சிக்கு கீழே பச்சை நிறத்தில் அசாதாரண நிழலுடன் கூடிய நீர்நிலை குளம் உள்ளது. மேகாலயா என்றாலே இந்த அருவி தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அருவியின் அழகும் பச்சை போர்வை போர்த்திய பசுமையின் அழகும் நம் கண்களைக் கவரும். அங்கு மென்மையாக வீசும் காற்று நமக்கு உற்சாகத்தை தரும்.

3. மாவ்லின்னோங் கிராமம் - (Cleanest village in Asia) :

மாவ்லின்னோங் வில்லேஜ்
மாவ்லின்னோங் வில்லேஜ்

மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். மவ்லின்னாங் 'ஆசியாவிலேயே தூய்மையான கிராமம்' என்று 2003ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமமாகும். இந்த கிராமம் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. 'கடவுளின் சொந்தத் தோட்டம்' (God's Own Garden) என்றும் அழைக்கப்படும் இந்த மாதிரி கிராமம் சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

இங்கு மூங்கிலால் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க 80 அடி உயர ஸ்கை நியூ தளம் மற்றும் வங்காள தேசத்தின் மிக அழகான பரந்த காட்சியை காண முடிகிறது. இங்கிருந்து வங்காள தேசத்தின் எல்லை சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாம் விருப்பப்பட்டால் இங்கு ஒரு மர வீட்டில் தங்கலாம் அல்லது  'ஹோம்ஸ்டே' என்ற போர்டு ஒன்று தொங்குகிறது. விருப்பப்பட்டால் அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு அந்த வீடுகளில் தங்கலாம்.

4. வாழும் வேர் பாலங்கள்:

வாழும் வேர் பாலங்கள்
வாழும் வேர் பாலங்கள்

மரங்களின் வேர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பாலங்கள் இது. வாழும் வேர் பாலங்கள் என்று அழைக்கப்படும் இது மனிதனால் உருவாக்கப்பட்ட இயற்கை அதிசயங்கள். காசி பழங்குடியினரால் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பண்டைய ரப்பர் மரங்களின் வேர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. சோஹ்ரா அதன் வாழும் பாலங்களுக்கு மிகவும் பிரபலமானது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மரங்களின் வேர்களை பெரிய பாலங்களாக வளர்ப்பதற்கான நுட்பங்களை மக்கள் அழகாக உருவாக்கியுள்ளார்கள். இதை செயல்படுத்த 10 முதல் 15 ஆண்டுகள் ஆகின்றன என்றும், பாலங்கள் பொதுவாக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் என்றும் கூறுகிறார்கள். மிகவும் பழமையானதாகவும் இன்னும் பயன்பாட்டிலும் உள்ளது இந்த அழகிய பாலங்கள்.

இதையும் படியுங்கள்:
பலாக்காய் மாவு உணவு சர்க்கரை நோயை குணமாக்குமா?
Meghalaya

இங்கு அன்னாசி பழங்கள் மிகவும் பிரபலம். ரொம்பவும் ஜூஸியாகவும், இனிமையாகவும் இரு. அந்த வேர் பாலங்களில் நடக்க நமக்கு கொம்பும் கொடுக்கப்படுகிறது. அதைக் கையில் கைத்தடி போல் வைத்துக்கொண்டு பாலத்தில் நடப்பது புதிய அனுபவம். மரங்களின் வேர்களைக் கொண்டு வித்தியாசமாக பாலங்கள் அமைத்தது ஆச்சரியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com