
ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான கடுமையான போக்குவரத்து விதிகள் உள்ளன. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காகத்தான். போக்குவரத்து விதிகள் சரியாக பின்பற்றப்படாதபோது அபராதம் சில நாட்கள் முதல் சிலமாதம் வரை சிறைத் தண்டனைகள் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் போக்குவரத்து விதிகளும், அதற்கான அபராதங்களும் நடைமுறையில் உள்ளன.
ஆனால் ஆரம்பம் முதலே கடுமையான போக்குவரத்து விதிகளை பின்பற்றும் சில முக்கியமான 5 நாடுகள் பார்ப்போம்.
நார்வே
நார்வே நாட்டில் வாகனம் ஓட்டும்போது வேகம் மிகவும் முக்கியமானது. இங்கு வேக வரம்பு மணிக்கு 20 கி.மீ மட்டுமே செல்லலாம். இதைத்தாண்டினால் 18 நாட்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம். நீங்கள் வேகத்தை அதிகரிக்கும்போது தண்டனைகள் இன்னும் கடுமையாக இருக்கும். இந்த கடுமையான விதிகள் மூலம் வேகத்தை குறைப்பதன் மூலம் சாலை விபத்துகளை குறைப்பதை நார்வே முக்கியமாக கொண்டுள்ளது. உண்மையில் இந்த கடுமையான அணுகுமுறை பயனுள்ளதாக நிரூபிக்கப் பட்டுள்ளது . ஏனெனில் இங்கு மிகவும் விபத்து குறைவாக நடக்கும் நாடுகளில் நார்வே ஒன்றாக உள்ளது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என சட்டம் உள்ளது . சீட்பெல்ட் அணிய மறந்துவிட்டால் அவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ18000 வரை அபராதம் விதிக்கப்படும்.
பல நாடுகளில் சீட் பெல்ட் சட்டங்கள் இருந்தாலும் அதை அமல்படுத்துவதில் ஆஸ்திரேலியா மிகவும் கடுமையான நாடாக இருக்கிறது. இதற்கு ஒரே காரணம் சீட் பெல்ட்டுகள் உயிர்களை காப்பாற்றுகின்றன. அதிகாரிகள் இந்த பெரிய அபராதத்தை ஒரு தண்டனையாக மட்டும் பார்க்கவில்லை. இந்த வரி உயிரை பாதுகாக்க எவ்வளவு முக்கியமானது என்பதையும் பார்க்கிறார்கள்.
அமெரிக்கா
அமெரிக்காவில் பயணம் செய்யும்போது கார்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குழந்தை பாதுகாப்பு பற்றிய சட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப் படுகின்றன. வாகனங்களில் குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து கடுமையான விதிகள் உள்ளது .இந்த சட்டங்கள் மீறப்பட்டால் அபராதம் சமூக சேவை அல்லது கட்டாய கல்வித் திட்டங்கள் கலந்து கொள்வது போன்ற தண்டனைகள் கொடுப்பார்கள். சாலையில் குழந்தைகளை முடிந்தவரை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அமெரிக்கா குழந்தைகளின் பாதுகாப்பையும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட விபத்துகளையும் தடுப்பதற்கு இந்த சட்டங்கள் உதவி செய்கின்றன.
இங்கிலாந்து
வாகன ஓட்டும்போது மொபைல் போன் பயன்பாட்டை இங்கிலாந்து சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை. ஹேண்ட்ஸ் ஃப்ரீ சாதனம் இல்லாமல் உங்கள் போனை பயன்படுத்தினால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். மற்றும் ஓட்டுனர் உரிமத்தில் ஆறு புள்ளிகளை இழக்க நேரிடும். தொலைபேசிகள் கவனச்சிதறலாக மாறி வருவதால் ஓட்டுநர்கள் சாலையில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய இங்கிலாந்து போக்குவரத்து விதிகளை கடுமையாக்கியுள்ளது. எவ்வளவு அவசரமான போன் அழைப்பு இருந்தாலும் வாகனம் ஓட்டும்போது பேசக்கூடாது.
சிங்கப்பூர்
போக்குவரத்து விதிமீறல்களை சிங்கப்பூர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவதில்லை. இங்கு அதிக வேகம், சட்ட விரோத வாகன நிறுத்தம் , மற்றும் தொடர்ச்சியான போக்குவரத்து கண்காணிப்புகள் மூலம் சிங்கப்பூர் உலகின் பாதுகாப்பான சாலை அமைப்பை உருவாக்கி உள்ளது .அனைவரும் விதிகளை பின்பற்றும்போது சாலைகள் சீராகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் மேலும் சட்டங்கள் தீவிரமாக கடைபிடிக்கப்படும் ஒரு இடத்தில் வளைவுகள் சிறப்பாக இருக்கும்.