
விமானத்தில் பயணம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உண்டு. குறிப்பாக உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சில அசௌகரியங்கள், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். அவை என்னென்ன உணவுகள் என்று பார்ப்போம்.
கார்பனேற்றப்பட்ட குளிர் பானங்கள்:
கார்பனேற்றப்பட்ட குளிர் பானங்களால் வீக்கம், வாயுப் பிரச்னை ஏற்படும். விமானத்தில் இருக்கும் அழுத்த மாற்றங்களால் வயிற்றைக் கலக்கும்.
வறுத்த உணவுகள்:
பயணத்திற்கு முன் எண்ணெயில் வறுத்த உணவுகளை சாப்பிடுவது, சோம்பலையும் , வயிறை கனமாகவும் உணர வழி வகுக்கும். வறுத்த உணவுகளில் உள்ள கொழுப்பு, உப்பு போன்றவை வீக்கம் அல்லது வாயுப் பிரசினையை ஏற்படுத்தும். அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே பயணம் செய்யும்போது இவற்றை தவிர்ப்பது நல்லது.
சிட்ரஸ் பழங்கள்:
ஆரஞ்சு, எலுமிச்சை பழம் போன்ற சிட்ரஸ் பழங்கள் புத்துணர்ச்சி கொடுக்கலாம். ஆனால், அவை அதிக அமிலத்தன்மை கொண்டதாக இருக்கும். விமானத்தில் வறண்ட காற்றோடு இருப்பதால் அவை நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள்:
பயணத்தின் போது சாப்பிட எளிதான சிற்றுண்டியானாலும் அசைவ சேர்க்கை பொருட்களால் நீரிழிப்பு, வீக்கம் போன்றவை ஏற்படலாம். விமான அழுத்தத்தால் விளைவு அதிகரிக்கும். அதனால் இதனை தவிர்ப்பது நல்லது.
ஆல்கஹால்:
விமானத்தில் ஏறும்முன் சிலர் குடிக்க ஆசைப்படலாம். ஆனால், அது நீரிழப்பை ஏற்படுத்தும். இது பயணத்தை மோசமாக்கி, தலை சுற்ற வைத்து, தூக்கத்தை சீர் குலைக்கும். வயிறு மந்தத்தை ஏற்படுத்தும். நம்மை சோர்வாக்கும்.
காரமான உணவுகள்:
விமானம் ஏறும் முன்பு காரமான உணவுகளை சாப்பிடுவதால், வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தி அஜீரணம், நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் விமானத்தில் எந்த இயக்கம் இல்லாமல் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கும்போது அவற்றை சாப்பிடக்கூடாது.
பருப்பு வகைகள்:
பருப்பு வகைகள், புரோட்டின் நார்ச்சத்துகள் நிறைந்த சிறந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. விமானத்தில் இடம் குறைவாகவும், காற்றழுத்தம் வித்தியாசமாகவும் இருக்கும் சூழலில் அவற்றை சாப்பிடும் போது வயிற்றில் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் வயிற்றில் சங்கடமான தருணங்கள் ஏற்படலாம். இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
விமானப் பயணத்தின் போது உணவில் எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.