இயற்கை அழகுக்கு மத்தியில் உயரமான கண்ணாடி பாலங்களில் நடப்பது என்பது ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தைத் தரக்கூடியது. இந்த அனுபவத்தை பெறுவதற்காக உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் கண்ணாடி பாலங்களால் ஈர்க்கப்படுகின்றனர். கண்ணாடி பாலங்கள் நவீன சுற்றுலாவின் பிரதான அம்சமாக மாறியுள்ளன. உலகளவில் ஏராளமான கண்ணாடி பாலங்கள் உள்ளன. குறிப்பாக சீனாவில் மட்டும் கிட்டத்தட்ட 2300 கண்ணாடி பாலங்கள் இருக்கின்றன.
மிகவும் பிரமிக்க வைக்கும், அதே சமயம் நம்மை பயத்தில் உறைய வைக்கும் 5 கண்ணாடி பாலங்களை இந்த பதிவில் காணலாம்.
இரு மலைகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பாக் லாங் பாலம் வியட்நாமில் அமைந்துள்ளது. 'பாக் லாங்' என்பதற்கு வியட்நாம் மொழியில் 'வெள்ளை டிராகன்' என்று பொருள். டெம்பர்ட் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பாலம் ஒரே நேரத்தில் 450 பேரின் எடையைத் தாங்கும். உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. 2.5 மீட்டர் அகலமும் மற்றும் 633 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம் சுமாராக 150 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் நின்றுகொண்டு குன்றுகள், பசுமை நிறைந்த காடுகள், ஆறு போன்ற இயற்கையின் அழகை ரசிப்பது ஒரு புதுவித அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.
1,726 அடி நீளமுள்ள இந்த பாலம் தெற்கு சீனாவில் அமைந்துள்ளது. இது உலகின் மிக நீளமான இரண்டாவது கண்ணாடி பாலமாகத் திகழ்கிறது. இது ஆற்றில் இருந்து 660 அடி உயரமுள்ள பள்ளத்தாக்கின் இரு பக்கங்களையும் இணைக்கும் தொங்கு பாலம். இந்த பாலத்தில் நின்று கொண்டே கண்ணாடி வழியாக சுற்றுலாப் பயணிகள் நேரடியாக ஆறையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் கண்டு களிக்கலாம்.
சீனாவில் உள்ள தியான்மென் மலைக் குன்றின் வழியாக 100 மீட்டர் நீளத்தில் இந்த ஸ்கைவாக் அமைந்துள்ளது. 'கோயிலிங் டிராகன் கிளிஃப் ஸ்கைவாக்' என்றும் இது அழைக்கப்படுகிறது. 4,700 அடி உயரமுள்ள இந்த பாலம், துணிச்சலான நபரையும் சற்று அசர வைக்கும். அதையும் தாண்டி இந்த பாலத்தில் இருந்து இயற்கையின் ரம்மியமான காட்சியைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் விரும்புகின்றனர்.
சீனாவில் இரண்டு மலைப் பாறைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்குக்கு குறுக்கே இந்த பாலம் நிறுவப்பட்டுள்ளது. இது 430 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும் தரையிலிருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் 800 பார்வையாளர்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரிசோனா மாகாணத்தில் அமைந்துள்ள கிராண்ட் கேன்யன் ஸ்கைவாக் U வடிவ பாலமாகும். அதிக காற்று, கடுமையான குளிர்கால வானிலை மற்றும் இயற்கையின் சக்திகளை தாங்கும் வகையில் மிகவும் வலிமையாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. ஈகிள் பாயின்டிலிருந்து 70 அடிக்கு வெளியே நீண்டுள்ளது சுமார் 4,000 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றியுள்ள பள்ளத்தாக்கு மற்றும் கொலராடோ நதியின் கண்கவர் காட்சிகளை கண்டு மகிழ்கின்றனர்.