அமானுஷ்யம், பேய் போன்றவற்றில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?சென்னையின் பரபரப்பான சாலைகள், மால்ஸ், பீச், கஃபே போன்ற இடங்களுக்கு சென்று போர் அடித்துவிட்டதா? செம்ம த்ரில்லிங் ஆன எக்ஸ்பீரியன்ஸ் வேணுமா? வாருங்கள்! சென்னைக்குள்ளேயே திகிலூட்டும் 5 இடங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
இது ஒரு திரைப்படத்தின் பெயராச்சே! என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், சென்னையில் இப்படி ஒரு இடம் உண்மையாகவே உள்ளது. சென்னையில் உள்ள பயங்கரமான, பயமுறுத்தும் வீடுகளில் இதுவும் ஒன்றாகும். போர்த்துகீசிய தொழிலதிபர் டி மான்டே இந்த காலனியை உருவாக்கினார். இந்த காலனியில் வசிக்கும் மக்கள், 'டி மான்டே' தெருவில் நடந்து செல்வதையும், அவரது ஆடும் நாற்காலியில் ஓய்வெடுப்பதையும், வீட்டின் பூட்டுகளைத் திறப்பதையும் மூடுவதையும் பார்த்திருக்கிறார்களாம். இந்தக் காலனியில் நுழையும் தெரு நாய்கள் மர்மமான முறையில் மறைந்து போகும் விசித்திரமான சம்பவங்களும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சாந்தோம் கடற்கரையிலிருந்து எலியட்ஸ் கடற்கரைக்கு எளிதாகச் செல்ல கட்டப்பட்டதுதான் இந்தப் பாலம். இது கடல் அலைகளைத் தாங்க முடியாமல், தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. திரைப்பட படப்பிடிப்புகளுக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் இரவில், பெண்கள் அழுதுகொண்டே அந்தப் பாலத்தில் சுற்றித் திரிவது போல பார்த்துள்ளதாகக் கூறியுள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் இங்கு செல்ல அனுமதி இல்லை. காலையிலோ அல்லது சூரியன் மறைவதற்கு முன்போ இந்தப் பாலத்தைப் பார்வையிடலாம்.
2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய பிறகு, இந்த சிறிய மீன்பிடி கிராமம் மனிதர்கள் இல்லாத இடமாக மாறியது. உடைந்த கட்டிடங்கள், ஒரு கோயில், சிதறிய துணிகள், காலணிகள் மற்றும் பொம்மைகளுடன் வெறிச்சோடிக் காணப்படும் இப்பகுதி சென்னையில் மிகவும் பயங்கரமான இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இரவு நேரத்தில் அந்த இடத்தை கடந்து செல்லும் மக்களும் பயணிகளும், சிரிப்பு மற்றும் அழுகை கலந்த விசித்திரமான சத்தங்களை அடிக்கடி கேட்பதாக கூறுகின்றனர். மேலும், இந்த மேம்பாலத்தில் யாரோ நடந்து செல்லும் சத்தம் கேட்பதாகவும், சில நேரங்களில் பாலத்தைக் கடந்து செல்லும் வாகனங்கள் தானாகவே நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
பகலில் இருபுறமும் பசுமை நிறைந்த அமைதியான சாலையாகத் தெரியும் இது சென்னையில் உள்ள சிறந்த பேய் இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் பயணிகளையும், நடந்து செல்லும் மக்களையும் யாரோ அறைவது விட்டு பின்னர் சத்தமாக சிரிப்பதாக பலர் கூறுகின்றனர்.