
தொழில் முறை பயணமாகவோ, அல்லது சுற்றுலாவுக்காகவோ, அடிக்கடி வெளியூர் பயணம் செய்யவோ, இல்லையென்றால் முதல் முறையாக ஓட்டலில் தங்குபவர்களாக இருந்தாலும் முதலில் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். அந்த வகையில் ஹோட்டல் அறையில் தங்குவதற்கு முன் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1.ஹோட்டலில் நேரடியாக முன்பதிவு செய்யலாம்
எப்பொழுதும் ஹோட்டலின் வலைதளம் மூலமாக நேரடியாக முன்பதிவு செய்வது சிறந்தது . ஏனெனில் மூன்றாவது நபர்களுக்கான புக்கிங் சைடில் முன்பதிவு செய்தால் சிறந்த சலுகைகளை இழக்க நேரிடுகிறது . ஹோட்டல்களில் அடிக்கடி வரும் விளம்பரங்கள், இலவச காலை உணவு, லாயல்டி பாய்ண்ட்ஸ் அறை மேம்படுத்தல்கள் அல்லது தாமதமான செக்-அவுட்கள் போன்ற சலுகைகளை நேரடியாக முன்பதிவு செய்பவர்களுக்கு பல ஹோட்டல்கள் வழங்குவதால் இச்சலுகைகளைப்பெற நேரடியாக புக்கிங் செய்யுங்கள்.
2.யுனிவர்சல் பவர் அடாப்டரை எடுத்துச் செல்லவும்
மின் சாதனங்களுக்கு தங்கு தடை இன்றி சார்ஜ் செய்ய யுனிவர்சல் பவர் அடாப்டரை எடுத்துச் செல்வது சிறந்தது. ஏனெனில் பல இடங்களில் பயணம் செய்யும்பொழுது வெவ்வேறு மின் நிலையங்கள் மற்றும் பிளக்குகளைக் கையாள்வது சிரமமானதாக இருக்கும்.
3.அறை சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
பல ஓட்டல்கள் கூடுதல் சேவைகளை வழங்குகின்றன. குறிப்பாக சலவை சேவைகள், இஸ்திரி சேவைகள், பேக்கிங் சேவைகள் போன்றவற்றை வழங்குவதால் உங்கள் நேரம் குறைவாக இருந்தால் இவற்றை பயன்படுத்தி உங்கள் அறையில் நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். அறை சேவை என்பது வெறும் உணவு அருந்துவதற்கு மட்டுமல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
4.அறை விபரங்கள்
சுற்றுலாப் பயணிகள் அதிகம் இல்லாத சமயங்களில் அந்த ஓட்டலில் உள்ள அறைகளின் விவரங்களை பற்றி தெரிந்து கொள்வதால், ஒருவேளை அடிக்கடி செல்ல வேண்டி இருந்தால் இது போன்ற அப்டேட்டுகள் உதவிகரமாக இருக்கும்.பெரும்பாலான ஓட்டல்கள் வாடிக்கையாளர்களிடம் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்வதால் தயக்கம் இல்லாமல் கூடுதல் விபரங்களை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவேண்டும் .
5.ஓட்டல் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் :
பல்வேறு ஓட்டல்கள் தங்குதலை மேம்படுத்த உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள் மற்றும் வணிக மையங்கள் என பல வசதிகளைக் கொண்டுள்ளன. இந்த வசதி தளர்வை பயன்படுத்தி பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவதோடு பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.
மேற்கூறியவற்றை கவனத்தில் கொண்டு ஹோட்டலில் தங்கும்போது தேவையான வசதிகளை கேட்டுப் பெறுங்கள்.