சுற்றுலாவில் ஆர்வம் உள்ளவர்களா நீங்க? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு!

Are you interested in tourism?
Poombarai
Published on

கோடைக் காலத்தில் சுற்றுலா செல்பவர்கள் ஊட்டி, கொடைக்கானல் என்று போன இடங்களுக்கே செல்ல விரும்பாமல் அதற்கு மாற்றாக போகாத இடங்களுக்கு போகத்தான் தற்போது விரும்புகிறார்கள். இதற்கு முக்கியத்துவம் தரும் விதமாக "2025 ஆண்டை டி டூர் (De tour) ஆண்டாக அறிவித்துள்ளது சுற்றுலா துறை. இந்த லிஸ்டில் இருப்பவர்களுக்காக சில வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள் இந்தப் பதிவில்.

பிச்சைமூப்பன் வலசை ; ராமேஸ்வரம் - தனுஷ் கோடியிலிருந்து 75 கிமீ தொலைவில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட மன்னார் வளைகுடா பகுதியில், 1 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவே மணல் திட்டுகள், தீவுகளின் இயற்கை அழகு, கடலுக்குள் காணப்படும் அரியவகை பவளப்பாறைகள், கடல்பாசிகள், வண்ண மீன்களின் அணிவகுப்பு அடங்கிய சொர்க்க பூமியாக ஏர்வாடி பிச்சைமூப்பன்வலசை சூழல் சுற்றுலா மையம் திகழ்கிறது.

ஏர்வாடியிலிருந்து 2 கி.மீ தொலைவில் பிச்சை மூப்பன் வலசை கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. பேருந்தில் சென்றால் ஏர்வாடி தர்ஹாவில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் செல்ல வேண்டும். இங்கு மன்னார் வளைகுடா தேசியப் பூங்கா வனத்துறையினர் 'சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையம்' படகு சவாரியுடன் அமைத்துள்ளனர். இங்கு கண்ணாடி தளம் அமைந்த படகில் சுற்றுலாப் பயணிகள் 12 பேர் உயிர் காக்கும் உடையுடன் (லைஃப் ஜாக்கெட்) ஒரு மணிநேர பயணமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். படகில் போகும்போது கடல் உயிரினங்களை காணலாம்.

பூம்பாறை; கொடைக்கானலில் இருந்து 18கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பூம்பாறை கிராமம் . சுத்தமான காற்று மற்றும் அமைதியான சூழலை அனுபவிக்க விரும்புகிறவர்கள் இங்கு வரலாம். இந்த இடம் பூண்டு உற்பத்திக்கு பெயர் பெற்றது. இது 1920 மீட்டர் உயரத்தில் அடுக்கடுக்கான வயல்களுக்கும், முடிவில்லாத வளமை ததும்புகிற பசுமைக்கும் மத்தியில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய 8 ஹில் ஸ்டேஷன்கள்!
Are you interested in tourism?

3000 ஆண்டுகள் பழமையான புராணக்கதைகளுடன் தொடர்புடைய முருகன் கோயில் பூம்பாறையின் முக்கிய ஈர்ப்பாகும். கோயிலுக்கு வெளியே உள்ள பூண்டு சந்தை பலரையும் கவரும், குறிப்பாக ‘மலைப்பூண்டு’ அதன் சுவை மற்றும் மருத்துவ மதிப்புக்காக போற்றப்படுகிறது. பூம்பாறை காட்டிலிருந்து சேகரிக்கப்படும் காட்டுத் தேனும் இங்கு பிரசித்தி பெற்றது.

கிண்ணக்கொரை: (Kinnakorai) (ஊட்டி) தமிழ்நாட்டின் ஊட்டியிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள குந்தா வட்டத்தில் அமைந்த கிராமம் ஆகும். . இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் 50 கிமீ தொலைவிற்கு உள்ளது. இதனருகில் அமைந்த ஊர் மஞ்சூர் ஆகும். இவ்வூரில் படகர் மொழி மற்றும் தமிழ் பேசப்படுகிறது. தமிழகத்தின் கடைசி கிராமமான இதை பார்க்காத இடம்... பயணிக்காத பாதையைகாண விரும்புகிறவர்கள் செல்லலாம்.

Kinnakorai
Kinnakorai

கிண்ணக்கொரை செல்லும் சாலை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய அனுபவத்தை தரும். செல்லும் வழியெங்கும் டீ எஸ்டேட் வாசம், இயற்கையின் எழில் கொஞ்சும் மலைகள், தேயிலைத் தோட்டங்கள், வழியெங்கும் எளிய மனிதர்கள், சிறு சிறு கிராமங்கள் என அனைத்தையும் ரசித்தபடியே செல்லலாம். செல்லும் வழியில் பல வியூ பாயிண்ட்கள் நம்மை வியக்க வைக்கும்.

சுந்தரபாண்டியபுரம்; குற்றாலத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம். அழகிய கிராமங்கள் நிறைந்த நெல்லை மாவட்டத்தில் இது மேற்கு தொடர்ச்சிமலையின் அருகில் அமைந்து நம்மைச் சொக்கவைக்கின்றது. இதை நெல்லை மாவட்டத்தின் `கோடம்பாக்கம்' என்றே அழைப்பர். இங்கு பிரபல ஹிட் படங்களின் பல படப்பிடிப்புகள் நடந்துள்ளது.

சுந்தரபாண்டியபுரம். பெயருக்கேற்றார்போலவே அழகும் பசுமையும் நிறைந்த கிராமம். சுந்தரபாண்டிய புரத்தில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய சூரியகாந்தி பூ தோட்டம் பார்ப்பவர்கள் கண்களைப் கவர்கிறது. குற்றாலம் சுற்றுலா வருகின்ற பலர் இங்கு வந்து சூரியகாந்தி பூக்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்வார்கள்.

இதையும் படியுங்கள்:
ஓட்டுநரே விபத்தை எதிர்கொண்டு அழைக்கலாமா?
Are you interested in tourism?

திருமலை நம்பி கோவில் ; திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் திருக்குறுங்குடியில் அமைந்துள்ளது. அழகிய நம்பிராயர் திருக்கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் நம்பியாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த தலம் திருமலை நம்பி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

பல்லவர்கள் காலத்து கோவில்.இயற்கை எழில் கொஞ்சும் இந்த கோவிலில் பல அரிய வகை சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்று யாழி கற்சிலை ஒன்றின் வாயினுள் சுழலும் கல். இங்கே கிரானைட் கற்கள் மற்றும் மரச்சிற்பங்கள் 2000 மேற்பட்டவைகள் உள்ளன. திருநெல்வேலி நகரில் இருந்து அரைமணி நேரத்தில் இங்கு வரலாம். திருநெல்வேலி, நாகர்கோயில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com